Header Ads



UNP யில் மாற்றமில்லை..

இன்று (05) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில், கட்சியில் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிகொத்தவில் இக்கூட்டம் இடம்பெற்றது.

ஆயினும், ஐ.தே.க.வின் அமைச்சர்கள் வெளிநாடு செல்வது தொடர்பில் வரையறை விதிக்கப்பட்டுள்ளதோடு, வருடமொன்றுக்கு இரு தடவைகள் மாத்திரம் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு வெளிநாடு செல்வதாயின் பிரதமரின் அனுமதி அவசியம் என, செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

குறிப்பாக எதிர்வரும் மே தினத்தை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் கயந்த கருணாதிலக மேலும் தெரவித்தார்.

இதேவேளை, அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களின் பலன்கள் அனைத்து பிரதேசங்களிலுமுள்ள மக்களையும் சென்றடைகின்றதா என்பதை உறுதி செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டது.

No comments

Powered by Blogger.