Header Ads



மனித மனங்களில் வாழும் ஜமால்தீன் SSP

-பி.எம்.எம்.ஏ. காதர் - 

மருதமுனை மண்ணின் வரலாற்றில் என்றும் போற்றப்படுபவர் டாக்டர் எச்.எல்.ஜமால்தீன் எஸ்.எஸ்.பி 2009.04.05ஆம்; திகதி ஞாயிற்றுக்கிழமை மாலைக் கருக்கலில் மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு அருகில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு அகால மரணமடைந்தார். 

மருதமுனையைச் சேர்ந்த ஹாமீதுலெவ்வை,சீனத்தும்மா தம்பதியின் புதல்வாரன எச்.எல். ஜமால்தீன் தனது ஆரம்பக்கல்வியை மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயத்திலும,;மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியிலும்; கற்றார். க.பொ.த.சாதாரண தரம் படிப்பதற்காக 1972ஆம்; ஆண்டு கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் இணைந்து திறமையாக தேறினார்.

1975ம் ஆண்டு உவெஸ்லி உயர்தரப் பாடசாலையிலிருந்து யாழ் இளவாலை ஹென்றி கல்லூரியின் பாதர் பிரான்சிஸ் அவர்களால் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு உயர்தரம் கற்றார்.அங்கு 19 வயதிற்குட்பட்ட அகில இலங்கை ரீதியான உதைப்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றி அவரது சிறந்த விளையாட்டின் மூலம் தனது அணியை வெற்றிபெறச் செய்தார்.

இவரின் சிறந்த ஆட்டத்திற்காக கல்வி அமைச்சு 'சிறந்த வீரருக்கான தங்கப்பதக்கம்' அணிவித்து இவரை கௌரவித்தது. உதைபந்தாட்டம் மூலம் மருதமுனைக்கு முதன் முதலில் தங்கப் பதக்கம் பெற்று வந்த பெருமை  ஜமால்தீனையே சாரும். பாடசாலைக் காலத்தில் ஒரு சிறந்த விளையாட்டு வீரனாகவும், தலைமைத்துவம் கொண்ட, ஆளுமைத்தன்மை கொண்ட ஒரு மாணவராகவும் இவர் திகழ்ந்தார்.

2007.06.07ஆம்; திகதி தொடக்கம் பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்ற ஜமால்தீன் 2007.11.10ஆம்; திகதி தொடக்கம் கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பிரதிப் பணிப்பாளராக மரணிக்கும் வரை கடமை புரிந்தார். மருதமுனையில் 1வது பொலிஸ் அத்திட்சகர் என்ற பெருமையை தனக்கும் மருதமுனை மண்ணுக்கும் தேடிக்கொடுத்தார். 

மருதமுனைக் கிராமத்திற்கு மட்டுமல்ல முழு தென்கிழக்குப் பிரதேசத்திற்குமே கலங்கரை விளக்கமாக பிரகாசித்துக்கொண்டிருந்த மர்ஹும். ஜமால்தீன் இன்றுடன் உயிர்நீத்து எட்டு வருடம(05-04-2017)கடந்தாலும் அவரது உணர்வுகளும், உண்மையான சேவைகளும் மக்கள் மனதில் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. 

1 comment:

  1. During our undergraduate days at Peradeniya university i was a bit late for an interview rushing through morning routine .
    I was astonished to find my beloved bosom room mate Marhoom Jamaldeen polishing my shoes .
    Many an instance such as this.
    May Allah grant him Jannathul Firdouse.His tragic death took place on my birth day.

    ReplyDelete

Powered by Blogger.