ரஷ்ய மெட்ரோ தாக்குதல், சந்தேக நபரின் அடையாளம் தெரிந்தது
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பொக் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு காரணமான கிர்கிஸ்தானை சேர்ந்த முக்கிய சந்தேக நபரை, 22 வயதான அக்பர்ட்சொன் ஜாலிலோஃப் என்று உறுதி செய்திருப்பதாக ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
தடவியல் சாட்சியம் மற்றும் பாதுகாப்பு கேமரா பதிவுகள் ஆகியவை இந்த நபரை வெடிக்காத இரண்டாவது கருவியுடன் தொடர்புடையவராக காட்டுவதாக புலனாய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய குண்டுவெடிப்பை நடத்திய சந்தேக நபர் கிர்கிஸ்தானை சேர்ந்தவர்
அவர் தற்கொலை தாக்குதல்தாரியா அல்லது குறித்த நேரத்திற்கு முன்னர் குண்டுவெடித்திருந்தால் அவர் கொல்லப்ட்டிருப்பாரா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
இந்த தாக்குதல் சிரியா மீதான ரஷ்யாவின் கொள்கைக்காக பழிவாங்குவதற்கு நடத்தப்பட்டதாக அனுமானிப்பது, குறைகாணுவது, கீழ்தரமானது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோஃப் தெரிவித்திருக்கிறார்.
இந்த குண்டு வெடிப்புக்கு பின்னர் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் பிற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னால் இத்தகைய தாக்குதல்களை சந்தித்தது இல்லை என்பதால் இந்த தாக்குதலால் நகரமே பீதியில் உறைந்திருப்பதாக பிபிசி செய்தியாளார் தெரிவித்திருக்கிறார்.

Post a Comment