முஸ்லிம் நாடுகளில் தலாக்
'தபால் அட்டை மூலம் தலாக் அனுப்பியவர் கைது' என்ற தலைப்பில் ஒரு செய்தியை இன்றைய தினம் பிரசுரித்திருந்தீர்கள். அச்செய்தியின் பிற்பகுதியில் பாகிஸ்தான் வங்கதேசம் உள்ளிட்ட பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் தலாக் சொல்லி விவாகரத்துச் செய்யும் நடைமுறையை தடைசெய்து விட்டன. இந்தியாவில் மட்டுமே இன்னும் தொடர்கிறது என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகவலானது உலக முஸ்லிம் சமூகத்தின் மீது இட்டுக்கட்டப்பட்ட ஒரு அபாண்டமான பொய்யாகும். நான் அறிந்த வகையில் பிலிபைனிலும், வத்திக்கானிலுமே தலாக் - விவாகரத்து முறை அனுமதிக்கப்படுவதில்லை. ஏனைய உலக நாடுகளில் குறிப்பாக மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளில் கூட இது நடைமுறையில் உள்ள ஒரு விடயமாகும்.
இவ்வாறிருக்க எப்படி உலகில் முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் பிரதானமான நாடுகளான பங்கலாதேஷ;, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இது தடை செய்ப்பட்டுள்ளது என்று அபாண்டமாக சொல்ல முடியும். இவ்விரு நாடுகளிலும் அஹ்லுஸ் ஸுன்னா எனப்படும் ஸுன்னீ முஸ்லிம்களே பெரும்பான்மையானவர்கள்.
எனவே, இஸ்லாம் அனுமதித்துள்ள இத்தகைய விடயங்களை அந்நாடுகள் தடை செய்துள்ளன என்பதானது அந்நாடுகள் இஸ்லாத்தை விட்டும் தூரமாகிவிட்டன என்ற பொருளைக் கொடுத்து விடும். எனவே இப்படியான தகவல்களைப் பிரசுரிக்கும் வேளை மிகவும் அவதானம் பேணப்பட வேண்டும் என்று வாசகன் என்ற வகையில் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
பிற்குறிப்பு
இந்த செய்தியை பிபிசி தமிழோசை பதிவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment