ஈரான் நாட்டில் நிலநடுக்கம்
ஈரான் நாட்டில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் நாட்டில் உள்ள இரண்டாவது பெரிய நகரமான Mashhad என்ற பகுதியில் இருந்து சுமார் 89 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நிலநடுக்கமானது புவியடுக்கின் கீழ் சுமார் 10 கி.மீ தொலைவில் பதவாகியுள்ளது.
எனினும், இந்நிலநடுக்கம் தொடர்பான பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Post a Comment