Header Ads



பௌத்தர்களின் பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதியுடன் பேச்சு, தவறினால் எதிர்ப்பு நடவடிக்கை

சிங்கள பௌத்தர்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

இன்று சிங்கள பௌத்த சமூகம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதிக்கும் பௌத்த மதத் தலைவர்களுக்கும் இடையில் நாளை சந்திப்பு நடத்தப்படவுள்ளது.

கண்டியில் நாளைய தினம் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக அஸ்கிரிய பீட அனுநாயக்க தேரர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதியும் அரசாங்கமும் சிங்கள பௌத்த சமூகம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கத் தவறினால் பௌத்த மாநாயக்க தேரர்கள் அரசாங்கத்திற்கு எதிராக சில எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடலாம் என தம்மதஸ்ஸி தேரர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. ஆடை உங்களுக்கு என்னடா பிரச்சினை நீங்கள்தான் உங்களுக்கு பிரச்சினை.நீங்கள் திருமணம் செய்யுங்கள்,மது குடிப்பதை நிறுத்துங்கள், கொள்ளை யடிப்பதை நிறுத்துங்கள்,பன்சலையில் பெண்களை பலாக்காரம் செய்வதை நிறுத்துங்கள்,மற்றவனைப் பார்த்து பொறாமைப்படாமல் அன்னியோன்னியமாக பழகுங்கள்,உழைத்து சாப்பிடுங்கள்,இதையல்லாம் நீங்கள் கடைப்பிடுத்து பௌத்த தருமத்தை பேணுங்கள்.உங்களின் மனதில் உள்ள கவலைகளும் பயமும் தானாக தீரும் அச்சம் இல்லாமல் வாழும் காலம் பிறக்கும்,இதை விடுத்து முஸ்லிம்களை பார்த்து போராமைப்படுவதே உங்கள் வேலை என்றால் இறைவன் உங்கள் உள்ளங்களில் தானாகவே பயத்தை திணிக்கின்றான்.அதற்க்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.