Header Ads



உயிருக்கு போராடிய பெண் - மீட்காமல் வீடியோ எடுத்து மகிழ்ந்த எஜமானி கைது

எண்ணை வளம் மிகுந்த குவைத் நாட்டில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் பணிபுரிய பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கு பலர் வீட்டு எஜமானர்களால் கடும் துன்பத்துக்கும் துயரத்துக்கும் ஆளாகின்றனர்.

இந்த நிலையில் ஒரு வீட்டில் வேலை பார்த்த எத்தி யோப்பியா வேலைக்கார பெண் தற்கொலை செய்ய 7-வது மாடியில் இருந்து குதித்தார்.

அதைப் பார்த்த அந்த வீட்டு எஜமானி மனம் பதறவில்லை. உடனே வீடியோ கேமிராவை கையில் எடுத்தார். வேலைக்கார பெண் தற்கொலை முயற்சியை வீடியோ படம் பிடித்தார். ஒரு கட்டத்தில் அப்பெண் குதித்த வேகத்தில் ஜன்னலின் சட்டத்தில் பிடித்தபடி தொங்கினாள்.

தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள் என கெஞ்சினார். ஆனால் அந்த எஜமானிக்கு மனம் இரங்கவில்லை. அப்பெண் படும் அவஸ்தையை வீடியோ படம் எடுப்பதில் குறியாக இருந்தார்.

இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு வந்த மருத்துவ குழு அப்பெண்ணை காப்பாற்றி கீழே இறக்கியது. இச்சம்பவத்தில் வேலைக்கார பெண்ணின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் கை எலும்பு முறிந்தது.

இந்த வீடியோ 12 நிமிடம் எடுக்கப்பட்டது. இதற்கிடையே உயிருக்கு போராடிய பெண்ணை மீட்காமல் அதை வீடியோ எடுத்து மகிழ்ந்த வீட்டு எஜமானி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

No comments

Powered by Blogger.