Header Ads



"ஒருநாளும் நான், இதுபோல் அழு­த­வ­னல்ல" (மைத்திரியின் பகல் கொள்ளை)


-முசலியிலிருந்து பி.எம்.முஜிபுர்ரஹ்மான் -

ஆசியா உம்மா
தம்பி, பல கஷ்­டங்­க­ளோடும், மிக மன­வே­த­னை­யோடும், பல சிர­மங்­க­ளுக்கு மத்­தி­யில்தான் நாம் இங்கு வாழ்­கிறோம். எங்­க­ளது  வாழ்­வா­தாரம் சீர­ழிக்­கப்­பட்­டுள்­ள­துடன், பல அசௌ­க­ரி­யங்­க­ளையும் எதிர்நோக்­கு­கிறோம். எங்­க­ளது, பொரு­ளா­தாரம் மற்றும் கல்வி என்­பன சீரின்றிக் காணப்­ப­டு­கின்­றன. மேலும், எங்­களுக்கு பாரி­ய­ளவில் குடிநீர் தட்­டுப்­பாடு காணப்­ப­டு­கின்­றது. அத்­தோடு, கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக எங்­க­ளது விவ­சாயம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வ­ளவு கஷ்­டங்­க­ளுக்கு மத்­தியில் இங்கு வந்து ஏன் நாங்கள் குடி­யி­ருக்­கிறோம், எங்­க­ளது சொந்த இடத்தை, பரம்பரை பரம்­ப­ரை­யாக வாழ்ந்த இடத்தை எப்­ப­டி ­வாப்பா விட்டுக் கொடுப்­பது? இதில்தான் எங்­க­ளது மூதா­தை­யர்கள் வாழ்ந்­தார்கள். எங்­க­ளுக்கு எல்லா ஆதா­ரங்­களும் இருக்­கின்றது. இந்­நி­லையில் இந்த அர­சாங்கம் ஏன் எங்­க­ளுக்கு இவ்­வாறு செய்­கி­றது. இந்த ஜனா­தி­ப­தியை நாங்கள் வாக்­க­ளித்து வெற்றி பெறச் செய்­தது எங்­க­ளது இடங்­களை பறிக்கச் செய்­வ­தற்கா? இது என்ன வாப்பா நியாயம்? எங்­க­ளது வாழ்க்­கையில் நிம்­ம­தியே கிடை­யாதா? ஏன் எங்­களை யாரும் கண்டு கொள்ளாமலிருக்­கி­றார்கள்? என்­றுதான் புரி­ய­வில்லை என கண்ணீர் வடித்துக் கூறினார்.

காதர் ஹாஜியார்
'மைத்­திரி அய்யா… சோதனை மேல் சோதனை போது­மடா சாமி. சோத­னைதான் வாழ்க்கை என்றால் தாங்­காது பூமி. சொந்தம் ஒரு கைவி­லங்கு (வாக்கு) நாம் போட்­டது. அதில் பந்தம் ஒரு கால் விலங்கு (வில்­பத்து) நீ போட்­டது.' வற்­றாத விளாத்திக் குளத்­தையும் மோத­ர­கம ஆற்­றையும் பார்த்து ஆறுதல் அடை­கி­றது உள்ளம். ஆனால், நம்­பிய உங்­க­ளது உள்­ளங்­களே வற்றிப் போய் எங்­களை இப்­படி சோதித்தால் நாம் எங்­கய்யா போவது. மைத்­திரி அய்யா… நீங்­க­ளுமா இப்­படி செய்­திட்­டீங்க. நம்­பவே இல்­லை­யேடா சாமி. ஆதாரம் இல்­லை­யப்பா ஆறுதல் சொல்ல, நான் அவ­தாரம் இல்­லை­யப்பா தத்­துவம் சொல்ல. பரி­காரம் தேடி இனி எவ்­விடம் செல்ல. எனக்கு அதி­காரம் இல்­லை­யப்பா வானகம் செல்ல. ஒரு நாளும் நான் இது போல் அழு­த­வ­னல்ல. அந்த திரு­வாக்கை கடன் கொடுத்­தவன் யாரிடம் சொல்ல. அய்யா… நீயாட வில்­லை­யப்பா உன் சதை­யா­டுது அது ஜனா­தி­பதி என்றும் மக்கள் என்றும் விளை­யா­டுது. பூவாக வைத்­தி­ருந்தோம் மன­மென்று, அதில் பூநாகம் இருந்து கொண்டு உற­வென்­றது. அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்­குமா, இடி போல தலைமை வந்தால் குடி தாங்­குமா? தம்பி…, என்­னால இதற்கு மேல ஒன்­றுமே செல்ல முடி­யல்­லப்பா. எனது தாய் பூமியை நினைச்சு நெஞ்சு வெடிக்­கி­ற­மா­திரி இருக்­கு­தப்பா. என்ன செய்ய…? யாரா­வது எங்­க­ளது தாயக பூமியை மீட்டுத் தர­மாட்­டாங்­களா…? இறைவா… நீயே போது­மா­னவன்'.

சுபியான் மாஸ்டர், 
இது ஒரு சர்­வ­தேச சதி. இலங்­கையின் சில பகு­தி­களை காடு­க­ளாக்க வேண்டும் என்­ப­தற்­காக வேண்டி முஸ்­லிம்கள் வாழும் பகு­தி­களை இந்த அர­சாங்கம் பறிக்­கின்­றது. ஆனால், வில்­பத்­துவின் கிழக்குப் பகு­தியில் சிங்­கள சமூ­கத்­த­வர்கள் வில்­பத்­துவின் பெரும் பகுதியை ஆக்கிரமிக்கின்றார்கள். அவர்கள் அப்பகுதியில் விவசாயம் மற்றும் குடியிருப்புக்களை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பகுதியில் அழிக்கப்படுகின்ற வில்பத்துவின் பகுதியை முஸ்லிம்களின் பகுதியில் அக்காட்டுக்கு சொந்தமாக்குவதற்காக வேண்டி வர்த்தமானி அறிவித்தல் செய்வது எந்த விதத்தில் நியாயமாகும். இவர்களுக்கு ஒரு நீதி அவர்களுக்கு ஒரு நீதியா? எனக் கேட்டார்.

இமாமுத்தீன்
முஸ்லிம்களின் பாரம்பரியக் காணிகளை அரசாங்கம் படிப்படியாக பறிக்கின்றது. ஆனால், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இதுவரை அவர்கள் ஏன் மௌனமாக இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை.  இது எமது பிரதேசத்தில் நடைபெற்ற மிகப் பெரிய அனர்த்தமாகும். இவ்வனர்த்தத்தில் இருந்து எம்மைக் காப்பது எமது அரசியல் மற்றும் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கடமையாகும். இதற்காக ஒத்துழைக்குமாறு அனைவரையும் அழைக்கிறோம்.

1 comment:


  1. IS THIS TRUE?
    CAN SOMEONE CHALLENGE THIS, Insha Allah. (Read below please?)
    Noor Nizam - Convener "The Muslim Voice".
    Environmentalist accuses authorities of playing tricks
    March 31, 2017, 10:28 pm

    by Maheesha Mudugamuwa



    A leading environmentalist on Thursday lashed out at President Maithripala Sirisena for what he called misleading the public by changing the names of the forest reserves instead of fulfilling his promise to bring the threatened forest reserve under the Wilpattu National Park.

    Environment Conservation Trust (ECT) Director Sajeewa Chamikara told The Island that five forest reserves encompassing 40,030.525 hectares at the northern end of the Wilpattu National Park, namely Mawillu, Marichchikaddi, Karadikkuli, Wilaththikulam and Periyamurippu, had been merged and declared the Mawillu Forest Conservation on March 24, 2017 by the gazette notification No: 2011/34.

    But, a total of 3,080 acres of forest initially included in forest reserves cleared for illegal settlements, along with reforestation areas and coastal area, had been removed from the Mawillu Forest Conservation gazetted last Friday (24), Chamikara said.

    He claimed that the action demonstrated that neither President Sirisena nor Prime Minister Ranil Wickremesinghe was keen to protect forests for posterity.

    Over 3,400 acres of forest had been cleared under the direct involvement of Minister Rishad Bathiudeen and that forest areas and coastal area intentionally removed from the newly declared Mawillu Forest Conservation, Chamikara alleged.

    Chamikara claimed that the removal of over 3,400 acres of forest land from the declared Mawillu Forest Conservation had been done intentionally to facilitate future development plan. The Forest Conservation Department (FCD) had craftily helped the government with its project. he alleged.

    The ECT Director urged the President Sirisena to add the whole forest area excluding the coastal area where permanent settlements had already been set up, to the Wilpattu National Park as its sixth section to protect the catchment areas of rivers including Malwathu Oya, Aru and Kal Aru, coastal area and villu wetland.

    Chamikara warned that if the government did not take immediate steps to declare the above mentioned areas as forest reserves, the bio diversity would be threatened by flooding and human-elephant would escalate.

    ReplyDelete

Powered by Blogger.