அரபு மொழி கற்பிக்கும் ஆசிரியர்களது நியமனம் இழுத்தடிப்பு - ஏன் இந்தப் பாராமுகம்..?
மனித வாழ்விற்கு அவசியமான சமயக் கருத்துக்களை மாணர்களுக்கு மத்தியில் ஏற்படுத்தும் சமய அசிரியர் நியமனங்களில் மௌலவி ஆசிரியர் நியமனம் இழுத்டிக்கப்படுவது கவலை தரும் விடயமாகும். இது தொடாபாக மத்திய மாகாண சபை கூடிய கவனம் எடுத்தல்வேண்டும் என மாகாண சபை அங்கத்தவர் ஹிதாயத் சத்தார் தெரிவித்தார்.
மத்திய மாகாண சபையின் மாதாந்த அமர்வு சபைத் தலைவர் எல்.டி.சிமலசிரி தலைதையில் பல்லேகலை மாகாண சபை மண்டபத்தில் இடம் பெற்ற போதே அவர் உரையாற்றும் போதே இதனைத் தெரவ்தார். அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது,
கடந்த காலங்களில் பட்டதாரி ஆசிரியர்கள் உள்வாங்கப்பட்டனர். அந்த வகையில் மத்திய அரசிற்கும் மாகாண அரசிற்கும் நான் நன்றி கூறக்கடமைப் பட்டுள்ளேன். இவ்வாறான பட்டதாரி நியமனங்களின் போது முஸ்லிம் பட்டதாரிகளும் உள்வாங்கப்பட்டனர். அவர்களில் அனேகர் இஸ்லாம் சமய பாடத்தை தமது பட்டப்படிப்பிற்கு ஒரு பாடமாகக் கொண்டவர்கள். இதன் காரணமாக அவர்களைக் கொண்டு இஸ்லாம் மதம் தொடாபான பாடங்கள் நடை பெற்ற போது இஸ்லாத்துடன் ஒன்றரக் கலந்த அரபு மொழியை கற்பிக்கஆசிரியர்கள் இல்லை. இஸ்லமிய நாகரீகத்தை ஒரு பாடமாகக் கொண்டு தமது பட்டைத்தை பூர்த்தி செய்தவர்பளால் அரபு மொழி கற்pப்ப முடியாது. தொடர்ந்து அரபு மொழி முஸ்லிம் பாடசாலைகளில் புறக்கணிக்கப்பட்டு வருகபிறது. குhரணம்அதற்கான ஆசிரிய நியதனம் வழங்கப்படாமையாகும்.
காலம்சென்ற ஜே.ஆர்.ஜயவர்தனா அவர்கள் ஜனாதிபதியாக இருக்கும் போது மௌலவி ஆசிரியர்நியமனம் இறுதியாக வழங்கப்பட்டது. அவர்கள் தற்போது ஓய்வு பெற்றும் விட்டார்கள். பாலி சமஸ்கிரத மொழிகளுக்கு வசதிகள் செய்யப்படடுள்ளவாறு அரபு மொழிக்கும் உரிய இடம் பாடசாலைகளில் வழங்கப்பட வேண்டும்.
எனவே நீண்டகாலமாக இழுத்தடிககப்பட்டு வரும் அரபு மொழி கற்பிக்கும் ஆசிரியர்களை நியமிக்க மாகாண சகை அழுத்தம் கொடுப்பதோடு நடவடிக்கையும் எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Post a Comment