Header Ads



கம்பளையில் இப்படியும் நடந்தது

கடமை நிமித்தம் சென்றுகொண்­டி­ருந்த பொலிஸ் கான்ஸ்­டபிள் ஒரு­வரை நாயொன்று கடித்­த­தாக தொட­ரப்­பட்ட வழக்கில் நாயின் உரி­மை ­யா­ள­ரான பெண்­ணுக்கு கம்­பளை நீதிவான் சாத்­தனி மீகொட 5,000 ரூபா அப­ராதம் விதித்துத் தீர்ப்­ப­ளித்தார்.

கம்­பளை  பிர­தே­சத்தைச் சேர்ந்த பெண் ஒரு­வ­ருக்கே இவ்­வாறு அப­ராதம் விதிக்­கப்­பட்­டது. கம்­பளை  பொலிஸ் நிலை­யத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்­ட­பி­ளான துஷார கட­மையின்  நிமித்தம் ஏத்­கால லக் ஷ்பிஹில்ல என்ற இடத்­துக்குச் சென்று கொண்­டி­ருந்­த­போது  இவரை நாய் கடித்­துள்­ளது.

வீட்டின் பாது­காப்­புக்­காக வளர்க்கும் நாயை கட்­டாக்­கா­லி­யாக வீதியில் விடா­மலும் அடுத்­த­வர்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டா­மலும் வளர்க்­கும்­படி நீதிவான் நாயின் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

No comments

Powered by Blogger.