Header Ads



முஸ்லிம் எம்.பி.க்கள் இன்று சந்­திப்பு - தீர்க்­க­மான முடிவைப் பெறுவது பற்றி மிகுந்த அவ­தானம்

-Vidi_

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டான சந்­திப்­பொன்றை தேசிய ஷூரா சபை இன்று மாலை 5 மணிக்கு கொழும்பில் நடத்­த­வுள்­ளது.

இச்­சந்­திப்பில் வில்­பத்து விவ­காரம் தொடர்பில் தீர்க்­க­மான முடிவைப் பெற்­றுக்­கொள்­வது பற்றி மிகுந்த அவ­தானம் செலுத்­தப்­ப­ட­வுள்­ளது.

இக்­கூட்­டதில் பாரா­ளு­மன்றில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்­பி­னர்கள், துறைசார் நிபு­ணர்கள், சட்­டத்­த­ர­ணிகள் மற்றும் சிவில் சமூக அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­களும் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

இதன்­போது வட மாகாண முஸ்­லிம்­களின் வெளி­யேற்றம் முதல் புதிய வர்­த­மானி அறி­வித்தல் வரை­யான காலப்­ப­குயில் “முஸ்­லிம்­களின் மீள் குடி­யேற்ற உரிமை மறுக்­கப்­பட்­டுள்ள விதம்” தொடர்­பான தொகுப்­பினை பேரா­சியர் எஸ்.எச்.ஹஸ்­புல்லாஹ் முன்­வைக்­க­வுள்ளார். அத்­துடன் “சட்ட வரை­ய­றைக்குள் குறித்த வர்த்­த­மானி அறி­வித்­தலை எதிர்­கொள்ள முடி­யு­மான உத்­திகள்” பற்றி சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் தெளி­வூட்­ட­வுள்ளார். 

இதே­வேளை வில்­பத்து வர்த்­த­மானி விவ­காரம் தொடர்பில் கால­தா­மதம் ஏற்­ப­டுத்தி அதனை மழுங்­க­டிக்கும் நிலையைத் தவிர்ப்­ப­தனை அடிப்­ப­டை­யாக்­கொண்டு குறித்த விட­யத்தில் உட­னடித் தீர்வு முன்­வைத்து அப்­பி­ர­தேச மக்­களின் காணி­க­ளையும் அவர்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­தையும் உறு­தி­செய்­வ­தற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஓரணியாக நின்று செயற்படுவதற்கும் அழுத்தம் கொடுக்கப்படவுள்ளது என தேசிய ஷூரா சபை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.