கல்குடாவில் மதுசார உற்பத்தி - ஜம்மியத்துல் உலமாவும் எதிர்ப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் மதுசார உற்பத்தி தொழிற்சாலையை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அதற்கான கண்டனங்களை தெரிவித்து அகில இலங்கை ஜம்மியத்துல் உலாமசபையின் கல்குடா கிளையினால் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று (04.04.2017) இரவு நடைபெற்றது.
அதன் தலைவர் ஏ.எல்.எம் இஸ்மாயில் மௌலவி அவர்களின் தலைமையில் ஜம்மியத்துல் உலாமசபையின் கல்குடா கிளையின் காரியாலயத்தில் இடம் பெற்றது.
இதில் மட்டக்களப்பு மாவாட்டத்தில் 32 மதுபான கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இது இங்குள்ள சனத்தொகை விகிதாசாரத்தை விட அதிகமாக உள்ளது மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும் போது அதிகமாகஉள்ளது போதைப் பொருள் பாவனையை இஸ்லாம் பெரும்பாவங்களுள் முதன்மையாக கருதுகின்றது ஒரு குற்றச்செயல்களின் முதன்மை காரணியாகவும் உள்ளது ஏனைய மதங்களும் மது பாவனையை எதிர்க்கின்றது.
மற்றும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்கு போதைப்பொருள் தடையாகஉள்ளது. இலங்கைதிருநாட்டின் தற்போதைய நல்லாட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இப்போதைப் பொருள் பாவனையை இல்லாமல் செய்வதற்கு கடும் பாடுபட்டவர் இவர்கள் தற்போது போதையற்ற இலங்கை எனும் தொனிப்பொருளில் பல செயற்றிட்டங்களை செய்து வருகின்றார் இந் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இம் மது உற்பத்தி தொழிற்சாலை நிறுத்தப்பட்ட செய்தி எமக்கு கிடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர் இம் மது உற்பத்தி தொழிற்சாலை கட்டமைப்பு பணிகள் நிறுத்தப்படா விட்டால் எமது அகில இலங்கை ஜம்மியத்துல் உலாமசபையின் கல்குடா கிளையானது பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடும் அதே போன்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் போராட்டமாக இது மாறும் என்றும் குறி;ப்பிடப்பட்டது இதில் அகில ஜம்மியத்துல் உலமாசபையின் கல்குடாகிளையின் உப தலைவர் மௌலவி எம்.எம் தாஹிர் கல்குடா ஸக்காத்நிதியதலைவர் மௌலவி ஏ.பீ.எம் முஸ்தபா உறுப்பினர்கள் மற்றும் பள்ளிவாயல் தர்மகர்த்தாக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதிகமான கட்டுறைகலில் எழுத்துப்பிலை இருக்கின்றது கவனிக்கவும்
ReplyDeleteகாலம் தாழ்த்திய கண்டனம்
ReplyDeletenono....not like that Mr. Abu Zalha...
ReplyDeleteSLTJ...kandanam terivittullathaal thaan intha ACJU yin arivippu...
illaavittaal ivargal tookkam kalattirukka maattaargal....Appavigal...