Header Ads



அமைச்சர்கள் வருடத்திற்கு 2 தடவைகளே பறக்கலாம் - ரணில் புதிய கட்டுப்பாடு

அமைச்சர்கள் வெளிநாடு செல்வதாயின் பிரதமரின் அனுமதி அவசியம் என இன்று காலை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

மேலும், அமைச்சர்கள் வெளிநாடு செல்வது தொடர்பில் வரையறை விதிக்கப்பட்டுள்ளதோடு, வருடமொன்றுக்கு இரு தடவைகள் மாத்திரம் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கட்சியில் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிகொத்தவில் இக்கூட்டம் இடம்பெற்றது.

No comments

Powered by Blogger.