நீரிழிவு நோய்க்கு, நபிவழியில் தீர்வு
-டாக்டர் ஹக்கீம் சையத் ஷா. ஷோய்புதீன்-
"நான் நோயுறும்போது அவனே (அல்லாஹ்வே) எனக்கு நிவாரணம் தருகின்றான்'' (அல்குர்ஆன் 26:80)
மேற்கண்டபடி நோய்க்கான நிவார ணத்தை தானே தருவதாக அல் லாஹ் திருமறைக் குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான். இதேபோல நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், எல்லா நோய் களுக்கும் இப்பூமியில் நிவாரணம் உண்டு என்கிறார்கள்.
கடந்த 14 நூற்றாண்டுகளாக முஸ்லிம்களால் வளர்ச்சி கண்டு வரும் யுனானி மருத்துவம், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமு றையை அடிப்ப டையாகக் கொண் டுள்ளது. எவருடைய வாழ்க்கை முறை சுன்னத்தான (நபி வழி) அடிப்படையில் அமைந்திருக்கிறதோ அவர்களுக்கு யுனானி மருத்துவம் அற்புதமான முறையில் பலனளிக் கும் என்பது திண்ணம். முஸ்லிம்கள் கட்டுப்பாடற்ற உணவுப் பழக்கத்திலிருந்தும், நேரம் தவறி உண்ணும் பழக்கத்திலிருந்தும் தவிர்த்துக் கொள்ள அறிவுறுத்துகிறது இஸ்லாம்.
ஒரு முஸ்லிம் அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலி என்ற நிலையில் உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். நீங்கள் உண்ணும்போது மூன்றில் ஒரு பகுதி உணவும், மூன்றில் ஒரு பகுதி தண்ணீரும், மீதமுள்ள பகுதியை (மூச்சு விடுவதற்காக) காலியாகவும் விட்டு வையுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. நன்றாகப் பசித்த பின்னர்தான் உணவு உட்கொள்ள வேண்டும் என்றும் இஸ்லாம் போதிக்கிறது. ஒருவருக்கு விருப்பமான உணவாக இருந்தாலும் அதை மூச்சு முட்ட உண்பதை தவிர்க்கச் சொல்கிறது இஸ்லாம்.
ஒரு முஸ்லிமின் சுன்னத்தான உணவுப் பழக்கம் என்பது, சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் அருந்த வேண்டும். சாப்பிட்ட பின்னர் சுமார் அரை மணி நேரம்வரை நீரருந்தக் கூடாது. உணவின் சுவைக்காக மசாலாப் பொருட்கள் உணவில் சேர்க்கப்படுகின்றன. ஆனால் தக்காளி, புளி, தேங்காய், மஞ்சள் மற்றும் மிளகாய் ஆகியவற்றை உணவுப் பொருட்களில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். உணவை நன்றாக மென்று அரைத்து அதன்பின் உட் கொள்ள வேண்டும். இது உணவை விரைந்து செரி மாணமாக்கும். தரையில் அமர்ந்து உண்பது சிறப் பானதாகும். ஒரு நீரிழிவு நோயாளி ஒரு நாளைக்கு 6 முதல் 8 மணி நேரங்கள் வரை கண்டிப்பாக தூங்க வேண்டியது அவசியம். நீரிழிவு நோயாளி மதிய உணவுக்குப் பின் உடனடியாக ஒரு மணி நேரமாவது தூங்குவது அவசியமாகும்.
ஆலிவ் (ஒலிவம்) எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தினால் லட்சக்கணக்கான நீரிழிவு நோயாளிகளின் வாழ்வை பாதுகாக்க முடியும். ஆலிவ் எண்ணெயை தலையில் தேய்ப்பதும், பாதாம் எண்ணெயின் சில துளிகளை பாலில் கலந்து இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன் உட்கொள்வதும் நீரிழிவு நோயாளிகளுக்கு நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும். நீரிழிவு நோயாளி உணவில் வினிகரை (காடி) சேர்த்துக் கொள்வது நல்லது. ஒன்று அல்லது இரண்டு கரண்டி அளவுக்கு வினிகரை வழக்கமான சமையல் மற்றும் மசாலா பொருட்களோடு சேர்த்துக் கொண்டால் அற்புதமான முறையில் ஜீரணக் குறைபாடுகள் நீங்கும். ஒரு நீரிழிவு நோயாளி தேவையற்ற வகையில் உடலை வருத் திக் கொள்வதையோ மனஉளைச்சல் அடைவதையோ தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இருப்பதைக் கொண்டு திருப்தி கொள்ளும் வகையில் ஒரு முஸ்லிம் இருக்க வேண்டும். நமக்கு ஏற்படும் (நன்மை தீமைகள்) அனைத்தும் அல்லாஹ் விதித்தபடியே நடக்கி றது என்பதை முஸ்லிம்கள் மன தார ஏற்றுக் கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகள் சுத்தமான தேன், மாதுளை, கருப்பு திராட்சை, பேரீட்சை, அத்திக்காய், ஆலிவ்காய் ஆகியவற்றை பயன்படுத்துவது சிறந்த பலனைத் தரும். நீரிழிவு நோயாளி ஒருவர் மேற்கண்டபடி நபிவழியி லான இயற்கை உணவுகளுடன் கூடிய உணவுக் கட்டுப்பாட்டை கடை பிடித்தால் நிச்சயமாக நீரிழிவு நோயின் காரணமாக உண்டாகும் கிட்னி, இருதயம், நுரையீரல், மூளை, கண்கள் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிப்பிலிருந்து விடுபடலாம். நீரிழிவு நோய் என்பதை மருத்துவத்துறை மெட்டா போலிக் டிஸ்ஆர்டர் என்று அழைக்கிறது. அதாவது உடலுக்கு தேவையான இன்சூலின் சுரக்காமல் போவது அல்லது இன்சூலினை சுரக்கச் செய்யும் செல்கள் செயல்படாமல் போவதாகும். இதன் விளைவால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடி விடும்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிகளவு தாகம், உடல் சோர்வு, உடல் வலி போன்றவை நீரிழிவு நோயின் அறிகுறிகளாகும். நீரிழிவு நோய் என்பது இன்றைய நிலையில் மனிதர் களை மெல்ல மெல்லக் கொல்லும் மிகப்பெரும் ஆபத்து களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. மருத்துவ உலகம் இது குறித்து எச்சரிக்கை செய்கின்றது. எனவே நீரிழிவு நோய் தாக்காமல் தற்காத்துக் கொள்ள மேற்சொன்ன நபிவழியில் அமைந்த உணவு முறையை கட்டுப்பாட்டோடு கடைபிடித்தால் சந்தோ ஷமாக, ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழலாம்.

முஸ்லிம்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டமாக இது இருக்கின்றது. நபியின் பெயர், மார்க்கம், ஈமான், குர்ஆன் போன்றவை முஸ்லிமகளை ஏமாற்றிப் பணம் பார்க்கும் வெற்றிகரமான வியாபாப் பொருட்களாக வேகமாக மாறிவருகின்றன.
ReplyDeleteஉம்ரா, ஹஜ் என்பவை வெற்றீகரமான வியாபாரங்களாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஊரில் வசதியற்றவர்களைக் கூட, ஜும்மா பிரசங்கங்கள் மூலம் வற்புறுத்தி உம்ராவுக்கும் ஹஜ்ஜுக்கும் அனுப்பும் கொமிஷன் மெளலவிகள் உருவானார்கள்.
இப்பொழுது நபிவழி மருத்துவம் என்னும் பெயரில் நபிவழியை கேலிக்கு உள்ளாக்கும் செயல் பிரபல்யம் பெற்று வருகின்றது. மேற்கத்தைய மருத்துவம் ஒரு பெரும் வணிகமாக மாறிவிட்டதால், அந்த வணிகத்திற்குப் போட்டியாக, முஸ்லிம்களை ஏமாற்றும் முயற்சியில் "நபிவழி மருத்துவம்" என்னும் சொல் பயன்படுத்தப் படுகின்றது.
நபி வலி மருத்துவம் என்று ஒன்றை முகம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு மருத்துவ முறையாக அறிமுகம் செய்யவோ, கற்பிக்கவோ இல்லை. நபி (ஸல்) அவர்களே நோய்வாய்ப் பட்டு, மிகவும் துன்பம் அனுபவித்து, தனக்கு வந்த நோயின் வேதனை வேறு யாருக்கும் வரக்கூடாது என்று பிரார்த்தனை கூட செய்து மிகவும் குறைந்த வயதான 63 (ஹிஜ்ரி கலண்டர் படி 63, ஆங்கில கலண்டர் படி பார்த்தல் அது இன்னும் குறைவு) வயதில் இவ்வுலகத்தை விட்டு சென்றார்கள்.
இந்த் உண்மை இப்படி இருக்க, சத்திர சிகிச்சை செய்யக் கூடாது, எல்லா நோய்களுக்கும் நபி வழி மருத்துவம் உள்ளது என்று முஸ்லிம்களை ஏமாற்றி பணம் பார்க்கும் ஒரு புதிய ஏமாற்று இப்பொழுது ஆரம்பமாகியுள்ளது.
ஒரு காலத்தில் மரணித்தவர்களை சுவர்க்கத்திற்கு அனுப்புகின்றோம் என்று சொல்லி கத்தம், பாத்திஹா என்று வயிறு வளர்த்த கூட்டத்தின் வாரிசுகள், தற்பொழுது புதிய ஏமாற்று வியாபாரத்தில் இறங்கியுள்ளனர்.
of course yes! more over in Sri lanka for Unani dr. no government job as a UNANI Dr.!
ReplyDeleteAmeer u r correct
ReplyDeletewell said mr.ameer
ReplyDelete