Header Ads



ஜனாதிபதியின் செயலாளருடன் ஹக்கீம் சந்திப்பு - வில்பத்து பற்றி பேச்சு

வில்பத்துவில் முஸ்லிம்கள் பூர்வீகமாக வாழும் பிரதேசமான கரடிக்குழி, பாலைக்குழி மற்றும் மறிச்சுக்கட்டி போன்ற பிரதேசங்களை வன பரிபாலனத் திணைக்களத்தினால் சுவீகரிப்பதற்கான வர்த்தமானி பிரசுரத்தை மீள்பரிசீலனை செய்து நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறு கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட குழுவினர் இன்று (3) ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்து கலந்துரையாடினர்.

வனபரிபாலன திணைக்கள மேலதிகாரிகள், சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஆகியோருடன் அமைச்சரின் சார்பில் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான், வடமாகாணசபை உறுப்பினர் ரயீஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் முயினுதீன், நியாஸ், முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

7 comments:

  1. இவர் எல்லா விடயத்திலும் சூர் ஊதிய பின் தான் அறிக்கைகளும் சந்திப்புகளும் நடத்துவார்.

    ReplyDelete
  2. hakkeem maama innum konjam late aahi mulichchi paathu irukkalaamae...

    ReplyDelete
  3. hakkeem maama innum konjam late aahi mulichchi paathu irukkalaamae...

    ReplyDelete
  4. He always join when the success comes, Never join at the beginning.

    ReplyDelete
    Replies
    1. 200%correct .This call fox's mind political this is no longer.allways can't make pooliest to public.

      Delete
  5. ஏற்கனவே ஒரு குழு ஜனாதிபதியின் செயலாளரை சந்த்தித்த பின் மீண்டும் முஸ்லிம்கள் சார்பாக இன்னொரு குழு சந்த்திக்கிறது. மாபெரும் காமடி பீஸாக மாறி விட்டார் ஹக்கீம் அவர்கள். முஸ்லிம்களின் அரசியலும் அதன் தலைமைகளும் பார்க்கும் போது, முஸ்லிம்களின் அரசியல் பெரும் கவலைக்கிடமாக உள்ளது. மாற்றம் தேவை. முஸ்லீம் மக்களும், அதன் புத்தி ஜீவிகளும் சிந்திப்பார்களா?

    ReplyDelete
  6. கிழக்குமாகாண மக்களே இன்னும் இவரோ/இவருடைய (ஹக்கீம் கட்சியோ) உங்களுக்கு தேவையா? அப்படியென்றால் நீங்களும் 100% சுயநலவாதிகள்தான். தற்போதைக்கு நமது சமூகம் எதிர்நோக்கும் எந்தப்பிரச்சனையாவதுக்கு தீர்ப்பத்துக்கு முயட்சித்திருக்காரா நமது தலைவரென்று சொல்லிக்கொள்ளும் ஹக்கீம் கட்சித்தலைவர். எல்லாம் முடிந்தபிறகு அவர்தான் பேசினாராம், அவர்தான் செய்தாராம். இதையே இன்னும் எதனை நெல்லைக்கு சொல்லபிறரோ தெரியல.
    ஏன் மக்களே இன்னுமா உங்களுக்கு விளங்குதில்லை இவருடைய அரசியல்?

    ReplyDelete

Powered by Blogger.