Header Ads



வாபஸ் பெறும்வரை போராடுவோம்...!

(விடிவெள்ளி பத்திரிகை வெளியிட்டுள்ள, ஆசிரியர் தலையங்கம்)

மன்னார் முசலி பிர­தே­சத்தில் வாழ்ந்த முஸ்­லிம்­களின் அதி­க­மான  பூர்­வீக இடங்­களை வில்­பத்து வன பகு­திக்­காக சுவீகரித்து ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன புதிய வர்த்­த­மா­னியில் கையொப்பம் இட்­டமை ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­க­ளையும் கவ­லை­யிலும் விரக்­தி­யிலும் ஆழ்த்­தி­யுள்­ளது.

இதனால் நமது சமூ­கத்தின் உரி­மை­களை வென்று தரு­வ­தற்­காக நாமெல்லாம் பாடு­பட்டு வாக்­க­ளித்த ஜனா­தி­ப­தியா இன்று நமது முதுகில் ஏறி சவாரி செய்­கிறார் என இலங்கை முஸ்­லிம்க்ள ஆதங்­கப்­படத் தொடங்­கி­யுள்­ளனர்.

ஜனா­தி­ப­தியின் இந்த  வர்த்­த­மானி அறி­வித்­தலை உட­ன­டி­யாக ரத்துச் செய்ய  வேண்டும் என்ற கோரிக்­கை­யுடன் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை முதல் மறிச்­சிக்­கட்டி, பாலைக்­குழி மற்றும் கர­டிக்­குழி மக்கள் போராட்­டத்தை ஆரம்­பித்­துள்­ளனர். இப்­போ­ராட்டம் இன்றும் நான்­கா­வது நாளாக  தொடர்­கி­றது. 

மக்­களின் இப் போராட்டம் தொடர்­கின்ற நிலை­யில்தான் நேற்­றைய தினம் ஜனா­தி­ப­தியின் அவ­சர அறிக்கை ஒன்றும் வெளி­யி­டப்­பட்­டது. இதற்­க­மைய வர்த்­த­மா­னியில் குறிப்­பிட்ட பிர­தே­சங்­களில் தற்­போது வாழ்ந்து வரும் மற்றும் மக்­க­ளுக்கு சட்­ட­பூர்­வ­மான உரிமை காணப்­படும் கிரா­மங்கள், காணிகள்,  வீடுகள் மற்றும் இஸ்­லா­மிய வணக்கஸ்தலங்கள் ஆகிய எது­வுமே இந்த வர்த்­த­மா­னியின் ஊடாக அர­சிற்கு கைய­கப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது

அத்­துடன் தனிப்­பட்ட மற்றும் அர­சியல் நோக்­கங்­க­ளுடன் சிலர் பொய்­யான பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் அந்த அறிக்­கையில் மேலும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. இருந்த போதிலும் ஜனா­தி­பதி செய­ல­கத்தின் இந்த அறிக்கை எந்­த­ளவு தூரம் நம்­பிக்­கை­ய­ளிக்கக் கூடி­யது எனும் கேள்வி எழு­வதை தவிர்க்க முடி­யா­துள்­ளது.

சுமார் 40 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட ஏக்கர் நிலத்தை வன­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தி­விட்டு அப் பகு­திக்குள் வரும் முஸ்­லிம்­களின் காணிகள் கைய­கப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை எனக் குறிப்­பி­டு­வ­தா­னது எந்­த­ளவு தூரம் சட்ட ரீதி­யாக ஏற்றுக் கொள்­ளத்­தக்­கது என்­பதை ஜனா­தி­பதி செய­லகம் தெளிவு­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

அதே­போன்­றுதான் நாட­ளா­விய ரீதியில் முஸ்­லிம்கள் ஜனா­தி­ப­தியின் இந்த செயற்­பாட்­டுக்கு எதி­ராக போராட்­டங்­களில் ஈடு­படப் போகி­றார்கள் என்­ப­தற்­காக, அதனைத் தடுத்து நிறுத்தும் முயற்­சி­யா­கவும் இந்த அறிக்­கையை நாம் கருத முடியும். கேப்­பாப்­பி­லவு தமிழ் மக்­களின் காணி மீட்புப் போராட்­டத்­திலும் ஜனா­தி­பதி தரப்பில் அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­திகள் இன்­னமும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை என்­பதையும் இங்கு ஞாபகமூட்ட விரும்புகிறோம். 

இன்­றைய தினம் இந்த விவ­காரம் தொடர்பில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெ­ற­வுள்ள கூட்­டத்தில் மேற்­படி வர்த்­த­மானி அறி­வித்தல் வாபஸ் பெறப்­பட வேண்டும் என்­பதை முஸ்லிம் தரப்பு வலி­யு­றுத்த வேண்டும். இல்­லா­த­பட்­சத்தில் முஸ்லிம் சமூகம் தொட­ராக தனது போராட்­டத்தை முன்­னெ­டுக்க வேண்டும்.

முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் இந்த விட­யத்தில் தமது அரசியல் நலன்களுக்காக மென்­போக்கை கடைப்­பி­டிக்க முயற்­சிக்கக் கூடும். எனினும் முஸ்லிம் சிவில் சமூ­கமும் பொது மக்­களும் உறு­தி­யாக போரா­டும்­பட்­சத்­தி­லேயே இப் போராட்டத்தில் வெல்ல முடியும். அதே­போன்று முசலி மக்­களின் இந்தப் போராட்­டத்­திற்கு நாட­ளா­விய ரீதியில் உள்ள சகல முஸ்­லிம்­களும்  ஆத­ர­வ­ளிக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். 

கேப்­பாப்­பி­லவில் தமிழ் மக்கள் தொடர் சத்­தி­யாக்­கி­ரகப் போராட்­டத்தை நடத்­திய சமயம்  அவர்­க­ளுக்கு  நாட­ளா­விய ரீதியில் மட்­டு­மன்றி  வெளி­நா­டு­களில் வாழ்­கின்ற தமிழ் மக்­களும் தமது ஆத­ரவை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

அத்­துடன் இந்த மக்கள்  போராட்டம் ஊட­கங்­களின் கவ­ன­யீர்ப்­பையும் பெற்­றி­ருந்­தது.   இதே­போன்று முசலி முஸ்லிம் மக்­களின்  போராட்­டத்­திற்கு நாட­ளா­விய ரீதி­யிலும் வெளி­நா­டு­க­ளிலும் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் தமது ஆதரவை தெரிவிக்க முன்வர வேண்டும். அதன் மூலமே அவர்களது  போராட்டம் தேசிய மட்டத்தில் கவனயீர்ப்பைப் பெற முடியும். 

மாறாக அரசியல், பிரதேச வேறுபாடுகளை  முன்னிறுத்தி  இம் மக்களுக்கு ஆதரவளிக்காத பட்சத்தில் அவர்கள் தனித்துவிடப்படுவர். இதன் மூலம் அப்போராட்டமும் கவனிப்பற்றதாக்கப்படும். நமது பூர்வீகமும் பறிபோய்விடும்.

1 comment:

  1. அ/அகும்,இ/அ,அல்லாஹ்விடம் ,மட்டும் பிராத்தியுங்கள்,நிச்சயம் பலன்,கிடைக்கும் இந்த அரசியல் எச்சப் பொறுக்கிகளைக மட்டும் நம்பாதீர்கள்.அனைவரும் ஒவ்வொரு தொழுகை பின்னரும் துவா செய்யவும் முடிந்தால் நோன்பு வைத்து கேட்பது நனறு
    எல்லா முஸ்லிம்களுக்கும்,இது காலத்தில்ன் கட்டாயமாகும்,

    ReplyDelete

Powered by Blogger.