மறிச்சுக்கட்டிக்கு செல்கிறது, முக்கிய குழு
-MC.Najimudeen-
வில்பத்து வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அப்பிரதேச மக்களுக்குப் பாதிப்பில்லாத தீர்வினை முன்வைப்பதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சூழல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு எதிர்வரும் 27ஆம் திகதி மன்னார் மறிச்சுக்கட்டிக்கு விஜயம்செய்து கள ஆய்வினை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவ்வாய்வினூடாக ஜனாதிபதி கையொப்பமிட்டு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், அதில் பிரதேச மக்களுக்கு சொந்தமான காணி இருப்பது உறுதிசெய்யப்படுமிடத்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை இரத்துசெய்து திருத்தியமைக்கப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. அபேகோன் உறுதியளித்துள்ளார்.

Post a Comment