Header Ads



கட்டுநாயக்க விமான நிலைய, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மீண்டும் திறக்கப்படுகிறது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவு செய்யும் இடம் மீண்டும் 7ம் திகதி மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வந்தமையாலேயே வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவு செய்யும் இடம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது புனரமைப்பு பணிகள் நிறைவுற்றுள்ளமையால் நாளைய தினம் விமான நிலையம் வழமைக்கு திரும்புவதுடன், நாளை மறுதினம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவு செய்யும் இடம் திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே,வெளிநாட்டு தொழிலுக்காக புறப்படும் இலங்கையர்கள் குறித்த பதிவினை கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் 7ஆம் திகதி முதல் பதிவு செய்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.