Header Ads



பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, ஓய்வுபெற்ற அரச அதிகாரியின் முன்மாதிரிச் செயல்


மாத்தளை மாவட்டச் செயலர் குமாரசிறி பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், தனது அதிகாரபூர்வ வாகனத்தை அதிகாரிகளிடம் கையளித்து விட்டு, பேருந்தில் ஏறி வீட்டுக்குச் சென்ற சம்பவம் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

33 ஆண்டுகள் அரச சேவையில் பணியாற்றிய குமாரசிறி நேற்று -03- மாத்தளை மாவட்டச் செயலர் பதவியில் இருந்து ஐந்து மாதங்கள் முன்கூட்டியே ஓய்வு பெற்றார்.

நேற்று மாவட்டச் செயலகத்துக்கு வந்த அவர், உரிய ஆவணங்கள் மற்றும் வாகனங்களை முறைப்படி அதிகாரிகளிடம் கையளித்து விட்டு அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டார்.

அதிகாரபூர்வ வாகனத்தையும் அதிகாரிகளிடம் ஒப்படைத்த அவர், பேருந்தில் ஏறி வீட்டுக்குச் சென்றார். இது அரச அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவர் மாத்தளை மாவட்டச் செயலராகப் பணியாற்ற முன்னர், அனுராதபுர மற்றும் நுவரெலிய மாவட்டங்களின் செயலராகப் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. கண்ணியமான கணவான்

    ReplyDelete
  2. idula enna parapappu nalla vedayam thane valttavm nermai

    ReplyDelete
  3. Great model .....for all government employees.

    ReplyDelete
  4. அரச ஊழியர் என்றால் இவ்வாறு இருக்கவேண்டும்.
    அரச ஊழியர்கள் மக்களுக்கு சேவை செய்யவேண்டியவர்கள்.
    நம் ஆசிய நாடுகளில் மட்டும்தான் அரச ஸ்தாபனங்களுக்கு சென்றால் peon தொடக்கம் manager வரை " சார்" போட்டு கும்பிடு போட்டு , இல்லை இலஞ்சம் கொடுத்துத்தான் நமது தேவைகளை பூர்த்தி செய்யவேண்டிய அவல நிலையில் நாம் உள்ளோம்.
    அரச ஊழியர்களுக்கு நமது வரிப்பணம் தான் சோறு போடுகிறது அவரது Job ஏ நமக்கு சேவைசெயவதுதான்.
    ஆகவே இந்நிலை மாரவேண்டும் இளைஞர்கள் இதை மாற்றவேண்டும். அரச உழியர்களுக்கு கும்பிடு போடுவதை நிறுத்த வேண்டும் அவர்களுக்கு சம்பளம் வழங்குவதே மக்களுக்கு சேவை செய்யவேண்டும் எனபதற்காகத்தான் என்பதை உணர்த்த வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.