Header Ads



முஸ்­லிம்­களின் நிலை, எமது ஆட்சிக் காலத்தை விடவும் மோச­ம் - பசில்

கபீர் ஹாசி­முக்கு வழங்­கப்­பட்­டுள்ள ஐக்­கிய தேசிய கட்­சியின் செய­லாளர் பத­வி­யா­னது வெறும் கண் துடைப்பு என முன்னாள் அமைச்சர் பசில் ராஜ­பக் ஷ குறிப்­பிட்டார்.

நேற்­று­முன்­தினம் பாணந்­து­றையில் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளு­ட­னான சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது,

தற்­போது முஸ்­லிம்­களின் பெரும் பங்­க­ளிப்­புடன் ஆட்­சி­பீ­ட­மே­றி­யுள்ள ஐக்­கிய தேசிய கட்­சி­ எப்­போதும் முஸ்­லிம்­களின் நலன்­க­ளுக்­காக செயற்­பட்­ட­தில்லை. இப்­போது முஸ்­லிம்­களின் நிலை எமது ஆட்சிக் காலத்தை விடவும்  மோச­மா­க­வுள்­ளமை இதற்­கான துல்­லி­ய­மான சான்­றாகும்.

ஐக்­கிய தேசிய கட்­சி­ கபீர் ஹாசிமை செய­லா­ள­ராக நிய­மித்து முஸ்­லிம்­களை கெள­ர­வப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக  முஸ்­லிம்­களில் ஒரு சாரார் கூறு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

இன்றும் சரி, அன்றும் சரி, எப்­போதும் கபீர் ஹாசிம் முஸ்­லிம்­களின் நலனை கருத்தில் கொண்டு பேசி­யதை நான் அவ­தா­னித்­த­தில்லை. அவ­ருக்கு செய­லாளர் பதவி வழங்­கப்­பட்­டாலும் அதன் பூரண அதி­கா­ரங்­களை இவர் கையில் எடுத்து செயற்­ப­டு­ம­ளவு  அதி­காரம் இவ­ருக்கு இன்னும் வழங்­கப்­ப­ட­வில்லை போன்றே இவ­ரது செயற்­பா­டுகள் அமைந்­துள்­ளன.

கடந்த ஜனா­தி­பதித் தேர்தல் காலப்­ப­கு­தியில் செய­லா­ளர்­களின் வகி­பாகம் முக்­கி­ய­மா­ன­தாக இருந்­தது. ஐக்­கிய தேசிய கட்­சியின் செய­லாளர் எங்கள் பக்கம் வந்தார். எங்­க­ளு­டைய செய­லாளர் அவர்கள் பக்கம் இருந்தார்.

இவ்விடத்தில் இரு கட்­சி­க­ளுக்­கு­மி­டை­யி­லான மோதல் சம நிலையில் இருந்­தது. மீள நிய­மிக்­கப்­படும் செய­லாளர் எங்கும் செல்­லா­துள்­ள­வ­ராக இருப்­பதை இரு கட்­சி­களும் உறுதி செய்து கொள்­வது தங்­களின் வெற்­றிக்கு மிகவும் முக்­கி­ய­மா­ன­தாக இருந்­தது.

அச்சந்­தர்ப்­பத்தில் நாங்கள் தயக்­க­மின்றி எங்கள் கட்­சியின் செய­லா­ளரை நிய­மித்தோம். முஸ்­லிம்கள் எம் மீது கோபம் கொண்­ட­வர்­க­ளாக இருந்­ததால் ஐக்­கிய தேசியக் கட்­சி­ அவ்விடத்­திற்கு கபீர் ஹாசிமை நிய­மிப்­பது மிகவும் பொருத்­த­மா­ன­தாக கரு­தி­யது. இப்­படித் தான் அவர் நிய­மிக்­கப்­பட்டார்.

அந்நேரத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சி­ முஸ்­லிம்­களின் வாக்­கு­க­ளையே தங்­களின் வெற்­றிக்கு பிர­தா­ன­மாக கரு­தி­யது. கபீர் ஹாசிமை செய­லா­ள­ராக நிய­மிப்­பது முஸ்­லிம்­களை ஐ.தே.க. கவ­ரவும் வழிகோலும் என்ற விட­யமும் அதன் பின்னால் ஒலிந்­தி­ருந்­தது.

இவ்­வாறு கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் முற்று முழு­தாக முஸ்­லிம்­களின் வாக்­கு­களை மையப்­ப­டுத்தி வாக்கு வியூ­கங்­களை வகுத்து முஸ்­லிம்­களை எம்­மி­ட­மி­ருந்து பல­வா­றான குறுக்கு வழி­களை கையாண்டு பிரித்த இவ்­வாட்­சி­, இன்று முஸ்லிம்களின் எந்தவிதமான அபிலாசைகளையும் நிறைவேற்றவில்லை.

இன்று கபீர் ஹாசிமுக்கு வழங்கப்பட்டுள்ள செயலாளர் பதவி கூட மிக விரைவில் பறிபோகவுள்ளது. இவ்வாட்சியானது முஸ்லிம்களை இயலுமானவரை பாவித்துவிட்டு இன்று கை கழுவியுள்ளது என்பதே உண்மையாகும்.

6 comments:

  1. உண்மை இல்லாமலுமில்லை

    ReplyDelete
  2. உண்மை இல்லாமலுமில்லை

    ReplyDelete
  3. எதிரியாக இருந்தாலும் சொல்வது முற்றிலும் உண்மை

    ReplyDelete
  4. WHAT MORE IS THE TRUTH, Insha Allah. A CHANGE HAS TO HAPPEN ON MAY 1st., 2017, Insha Allah.

    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  5. All Muslims should give votes to JVP and see for a change. The main two parties are useless.

    ReplyDelete
  6. @ Noor Nizar நன்றி! கட்டுரை எழுதாமல் கருத்து எழுதியற்கு...

    ReplyDelete

Powered by Blogger.