Header Ads



விகாரைக்குள் நுழைந்து அனைத்து, புத்தர் சிலைகளையும் நொறுக்கிய மர்ம கும்பல்

விகாரைக்குள் நுழைந்து அங்கிருந்த அனைத்து புத்தர் சிலைகளும் மர்ம கும்பலம் ஒன்றினால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளது.

அவிசாவளை திகன பிரதேசத்தில் இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

உடைத்து நொருக்கப்பட்டுள்ள சிலைகளுக்குள் மிக முக்கியமான கருதப்படும் சிலை ஒன்றும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் விகாரையினுள் எந்த ஒரு பிக்குவும் இருக்கவில்லை என கூறப்படுகின்றது.

விகாரையில் வசதியின்மையே அதற்கு காரணமாகும். என்ன காரணத்திற்காக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதென தெரியவில்லை என விகாரையின் தேரர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவத்திற்கு பொறுப்பு கூறும் எந்தவொரு நபரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.

1 comment:

  1. இது நன்கு திட்டமிடப்பட்ட இன வாதிகளின் மிகப்பெரிய சூட்சி சில நாட்களாக பிரச்சினைகள் இல்லாமல் இருக்கிறது அதனை ஆரம்பித்து வைக்கின்றார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.