Header Ads



முஸ்லிம்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம், ஜனாதிபதியிடம் இல்லை - பைசர் முஸ்தபா

வில்பத்து வன பகுதிக்கு வடக்கே அமைந்துள்ள பிரதேசத்தின் முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசமும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி என ஜனாதிபதி வர்த்தமானியில் பிரகடனப்படுத்தியுள்ளதாக சில இனவாதிகள் மக்களை குழப்ப நிலைக்கு உள்ளாக்கி வருகின்றனர். இது பெரும் பொய்யான தகவலாகும்.

அவ்வாறு எவரினதும் காணி வர்த்தமானி அறிவுறுத்தலில் உள்ளடக்கப்பட்டிருந்தால் நேரடியாக ஜனாதிபதியிடம் முறையிடலாம் என உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். கொழும்பு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வில்பத்து வன பாதுகாப்பு வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டத்தின் போதே அமைச்சர் பைசர் முஸ்தபா மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

வில்பத்து வன பிரதேசம் மிகவும் முக்கியமானதும் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசமுமாகும். இன்று இருபத்தைந்து வீதமான காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. எமது இலக்கு முப்பத்தைந்து வீதமாக காட்டை வளர்ப்பதேயாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முஸ்லிம் சமூகத்திற்கு எவ்வித துரோகத்தையும் விளைவிப்பவர் அல்ல. அவ்வாறான எண்ணமும் அவரிடம் இல்லை.

வில்பத்து வர்த்தமானி அறிவித்தலில் முஸ்லிம் மக்கள் வாழும் எப்பிரதேசமும் உள்வாங்கப்படவில்லை. முஸ்லிம் மக்களின் பூர்விக காணிப் பகுதியோ, அல்லது பள்ளிவாசல் பிரதேசமோ இவ் வர்த்தமானி பதிவில் அடங்கவில்லை. இனவாதிகள் இன்று முஸ்லிம் மக்களை உசுப்பிவிட்டு இந்நாட்டை அழிக்க முயலுகின்றனர். 1983 கலவரம் மற்றும் முப்பது வருட யுத்தத்தின் வடுக்கள் இன்னும் மறையவில்லை.

அரசு மேற்கொண்டு வரும் ஒவ்வொரு திட்டத்தையும் இனவாதிகள் விமர்சனம் செய்கின்றனர். இந்நாட்டு சிறுபான்மை மக்கள் கடந்த ஆட்சிக்காலத்தில் பட்ட வேதனைகளும், துயரங்களும் இன்னும் எம்மைவிட்டும் விலகவில்லை. இன்று மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர்.

முஸ்லிம் சமூகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு ஜனாதிபதி தேர்தலில் பெரும் பங்களிப்பை வழங்கியதை ஜனாதிபதி மறக்கவில்லை. இவ்வாறான ஒரு சமூகத்துக்கு ஜனாதிபதி துரோகம் செய்ய மாட்டார். இனவாத சக்திகள் முஸ்லிம் மக்கள் மத்தியில் வில்பத்து விடயத்தில் இன விரோத செயல்களை விதைத்து வருகின்றனர். முஸ்லிம் மக்களுக்கு தெளிவாக தெரிவிக்கின்றேன். முஸ்லிம் மக்களின் காணி எவ்விதத்திலும் வன பாதுகாப்பு பிரதேசத்திற்குள் அடங்கவில்லை.

சிங்கள, முஸ்லிம் மக்கள் யுத்தக் காலத்தில் இடம்பெறயர்ந்தனர். அவர்களின் மீள் குடியேற்றத்தின் போது எவ்வித பாதிப்பும் ஏற்படாது. முஸ்லிம் மக்களுக்கு சந்தேகம் தொடருமானால் ஜனாதிபதியின் பிரகடனம் அடங்கிய வர்த்தமானி மூலம் பார்வையிட்டு தெளிவுப் பெறலாம்.

நான் இலங்கையன் என்ற நாமத்திலேயே இயங்குகின்றேன். நான் தெளிவாக மீண்டும் தெரிவிக்கின்றேன். வர்த்தமானி விடய பதிவில் எந்தவொருவரினதும் காணி உள்ளடக்கப்படவில்லை. இவ்விடயத்தில் ஜனாதிபதி நேர்மையை கையாண்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.

5 comments:

  1. Evan ippadithaan Mahinda kitta irrukkum pothum sonnaan. Evan oru munaafik. Musleenkal evani namba koodathu, Insha Allah.

    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. உங்க நியாயம் யார் கேட்டது முடியம்னா இடத்தை வாங்கிக்கொடும், இல்லாட்டி ஜால்ரா அடிக்கிறதை நிறுத்திட்டு பொத்திட்டு போங்க

    ReplyDelete
  3. So You says.. What ever RISHAD ministers is telling in this regard is wrong ? Mr Fizar.. have you visited this area people to know the reality or JUST passing statement from your office to satisfy your party and protect your chair? Do not confuse people..Rather You also join with other Muslim leaders to solve the problem of this area people in one voice.

    ReplyDelete
  4. எனக்கு தலையே சுற்றுகின்றது போல் உள்ளது யார் இதில் உண்மை சொல்லுபவர் .
    அமைச்சர் ரிஷாத் பதுருடீனா , அல்லது அமைச்சர் பைசர் முஸ்தபாவா , அல்லது ஊடகங்களா . இங்கு யார் யாரை ஏமாற்றுகின்றனர் இவ்வளவு நாளும் வாய் பொத்தி இருந்து விட்டு இப்போதுதான் வாய் திறந்து உள்ளார் அமைச்சர் பைசர் முஸ்தபா எனக்கு என்றால் இவரில் தான் ஒரு சந்தேகம் வரும் மாகான சபை தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகள் சரியும் என்ற எண்ணத்தில் இவர் இப்போதே இருந்து ஜனாதிபதியின் பக்கம் மக்களை திருப்ப பார்கின்றார் போலும். அப்படியாயின் கடந்த சில நாட்களுக்கு முன் 30 பேர் அடங்கிய குழு ஒன்று ஜனாதிபதியை அவசரமாக சந்திக்க போனார்கள் என்ன அவர்கள் எல்லாம் பிழையாக வழி நடத்தப்பட்டனரா. மற்றும் அங்கு சென்ற அனைவரும் ஒழுங்காக இதை படிக்காமலா சென்றனர் இந்த அமைச்சர் பைசர் முஸ்தபாவின் பேச்சை பார்க்கும் பொது அங்கு போன அனைவரும் முட்டாள்கள் மற்றும் இனவாதிகள் பொண்டு தான் உள்ளது .

    ReplyDelete
  5. Certification from National MP Golaya.....

    ReplyDelete

Powered by Blogger.