Header Ads



ஒரு பேஸ்புக் போஸ்ட்டுக்கு 500,000 டொலர் அபராதம்

பெண் ஒருவர் தனது நண்பர் ஒருவரை குறித்த தவறான தகவலை பேஸ்புக்கில் பதிவு செய்ததற்கு அவருக்கு நீதிமன்றம் 500,000 டொலர் அபராதம் விதித்துள்ளது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவைச் சேர்ந்த ஜாக்குலின் ஹாம்மோண்ட் என்பவர், கடந்த 2015 ஆம் ஆண்டு தனது பேஸ்புக் பக்கத்தில் ‘எனது மகன் கொலைக்கு டுவெயின் டயல்’ என்பவர்தான் காரணம் என பதிவு செய்திருந்தார்.

இந்த தகவலை பார்த்து மனதளவில் உடைந்துபோன டயல், இதுகுறித்து வடக்கு கரோலினா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘ஜாக்குலின் ஹாம்மோண்ட் மகனின் கொலைக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

சமூக வலைதளங்களில் போஸ்ட்களை பதிவு செய்ய எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை என்பதால் அவர் என்னை குறித்த பல பொய்யான போஸ்ட்டுகளை கடந்த ஓராண்டுக்கும் மேலாக பதிவிட்டு வருகிறார். ஆனால், இந்த போஸ்ட் என்னை மிகவும் பாதித்தது’ என கூறியிருந்தார்.

இந்த வழக்கில் வடக்கு கரோலினா நீதிமன்ற நீதிபதி, ஜாக்குலினுக்கு 5,00,000 டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் ரூ.7,61,30,000) அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வழக்கறிஞர் மிஸ்ஸி ஓவன் கூறுகையில், 

இன்றையகால மக்கள் தங்கள் வார்த்தைகளின் முக்கியத்துவத்தை உணர்வதில்லை. அதனால், ஜாக்குலின் ஹாம்மோண்ட் தவறின் மூலம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒருவரை குறித்து தவறான கருத்துகளை எழுதும்போது பிரச்னைகள் உருவாகுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கும். மேலும், நாம் பதிவு செய்யும் ஒருவரின் தவறான கருத்துகள் அவருக்கு சமூகத்தில் இருக்கும் மதிப்பையும், மரியாதையையும் குறைத்துவிடும்’ என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.