Header Ads



"எந்தவொரு இறைச்சிக் கூடமும் கடவுளின் சட்டத்தின்கீழ் சட்டப்பூர்வமானது இல்லை"

உத்தரப் பிரதேசத்தில் சட்டவிரோத இறைச்சிக்கூடங்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றிய விவாதங்கள் சூடுபிடித்துக் கொண்டே இருக்கின்றன.

யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, மாநில காவல்துறையினர் பெருமளவிலான இறைச்சிக் கூடங்கள் மற்றும் கசாப்புக் கடைகளை மூடிவிட்டனர்.

"மாநிலத்தில் இயங்கிவரும் சட்டவிரோத இறைச்சிக் கூடங்களை அகற்ற வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் இரண்டு ஆண்டுகளாக அழுத்தம் கொடுத்துவருகிறது. சட்டவிதிகளை பின்பற்றி செயல்படும் இறைச்சிக்கடைகளை நாங்கள் ஒன்றும் செய்யவில்லை" என்று யோகி ஆதித்யநாத் அண்மையில் தெரிவித்தார்.

"தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் விதிமுறைகளை பின்பற்றாமல், சட்டவிரோதமாக இறைச்சிக் கழிவுகளை கொட்டி வரும் இறைச்சிக்கூடங்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொதுமக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடும் யாரும் தப்பிக்க முடியாது" என்றும் யோகி ஆதித்யநாத் கூறுகிறார்.

"எந்தவொரு இறைச்சிக் கூடமும் கடவுளின் சட்டத்தின்கீழ் சட்டப்பூர்வமானது இல்லை" என்று பாபா ராம்தேவ் தமது டிவிட்டர் செய்தியில் தெரிவித்திருக்கிறார். "பசுவை கொல்வது சட்டவிரோதமானது"என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும், "சட்டவிரோத இறைச்சிக்கூடங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்துவந்தாலும், சட்டப்படி செயல்படும் மற்றும் உரிமம் வைத்திருக்கும் இறைச்சிக் கடைகளுக்கும், கூடங்களுக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை என்று உறுதியளிக்கிறார் உத்தரபிரதேச மாநில அமைச்சர் சித்தார்த்நாத்.

பாபா ராம்தேவின் கருத்துக்களுக்கு சமூக ஊடகங்களில் எதிர்வினைகள் சூடாக நடக்கிறது.

சிலர் ஆதரவு தெரிவிக்க, மற்றும் சிலரோ, பாபா ராம்தேவிடம் எதிர்கேள்விகளை தொடுக்கின்றனர்.
"நீங்கள் தயாரிக்கும் மருந்துகள் சைவமா?" என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

" பாபாஜி, மனித உலகில் கடவுளின் சட்டங்கள் செல்லாது"என்று ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். BBC

2 comments:

  1. The God's law book Holy Qur'an says:

    " (தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர; (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்; அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்; இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்; எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக; இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்."
    (அல்குர்ஆன் : 5:3)
    www.tamililquran.com

    ReplyDelete
    Replies
    1. Subhaanallah ! Here's the law of God. People go behind some frivolous things while the revelation of truth (Al-Quran) exist.

      Delete

Powered by Blogger.