இலங்கைக்கு 55 இலட்சம், தினார்களை கடன் வழங்கும் குவைத்
களு கங்கை அபிவிருத்தித் திட்டத்துக்கு உதவும் வகையில் ஐம்பத்தைந்து இலட்சம் குவைத் தினார்களை கடனாக அளிக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தம் குவைத்தில் நேற்று (31) கைச்சாத்திடப்பட்டது.
இலங்கை சார்பில் நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்கவும் குவைத் சார்பில் அரேபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தின் பிரதி இயக்குனர் அஹமட் அல் ஒமரும் இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
ஏற்கனவே கடந்த 2009ஆம் ஆண்டு இதற்கான மூல ஒப்பந்தம் இவ்விரு நாடுகளிடையே கைச்சாத்திடப்பட்டிருந்தது. மொத்தமாக பத்து மில்லியன் குவைத் தினார்கள் இந்த ஒப்பந்தம் மூலம் களு கங்கை அபிவிருத்தித் திட்டத்துக்குக் கிடைக்கவுள்ளது.
இந்நிதியுதவி மூலம் மகாவலி அபிவிருத்தி வலயப் பிரதேசத்தில் விவசாய நிலங்கள் மற்றும் உற்பத்திப் பொருட்களை அதிகளவில் உருவாக்குவதன் மூலம் நாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் உடைக்கப்படும் பள்ளிகளின் எண்ணிக்கைகளையும் தயவு செய்து குறிப்பிட வேண்டும்.முசலி மக்கள் பாதையில் தூங்கும் காட்சி ஒரு பக்கம் மறு பக்கம் குவைத்தின் நிதி உதவி கேடு கேட்ட இனத்துவேச அரசாங்கத்துக்கு. இதனை பெற்றுக்கொடுக்கும் முயற்சியை யாரோ ஒரு முக்கிய முஸ்லிமாகத்தான் இருப்பார்.அவருக்கு இந்த நாட்டில் முஸ்லிம்கள் என்ன பாடு பட்டாலும் பரவாயில்லை.இவ்வாறான முஸ்லிம்கள் குருடனாகவே எழுப்பப்படுவார்கள்.
ReplyDeleteWhen the west assist they put lot of terms but these Muslim countries support our country generously.
ReplyDeleteLook at Pakistan while it maintains millions of Afghan refugees with seltors with lot burden to shoulder itself, also supports to elevate our poverty by donating rice to us.
Unfortunately,our own people have to struggle for centuries to have seltor and their rights in their own land. Our president is making these poor people's situation to become worse and worse. Sri Lankan have to learn lot from nations like Pakistan.
Unfortunately, we may expect another calamity if unjustice becomes law. May god forbid.