கொழும்பில் 18 மணி நேர நீர் வெட்டு
நாளை (04) காலை 9.00 மணி முதல் கொழும்பின் பல பகுதிகளில், 18 மணி நேர நீர் விநியோக தடை மேற்கொள்ளப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அறிவித்துள்ளது.
aஅதன் அடிப்படையில், களனி பாலம் முதல் தெமட்டகொட வரையான பகுதி மற்றும் அதனுடன் தொடர்புற்ற அனைத்து சிறிய பாதைகள், பலாமரச் சந்தி, கிராண்ட்பாஸ், மஹவத்த மற்றும் தொட்டலங்க உள்ளிட்ட பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைப்படும் சபை அறிவித்துள்ளது.
குறித்த நீர் விநியோகத் தடை நாளை (04) காலை 9.00 மணி முதல், அதிகாலை 3.00 வரையான 18 நேரங்களுக்குத் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment