O/L பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் வீதம், இவ்வருடம் அதிகரிப்பு
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் வீதம் ஏனைய அண்டுகளுடன் ஒப்பிடும் போது அதிகரித்துள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறினார்.
கணிதம் போன்ற பாடங்களில் சித்தயடைந்தவர்களின் வீதம் இம்முறை உயர் மட்டத்தில் காணப்படுகின்றதென்று பரீட்சைகள் ஆணையாளர் தனக்கு அறிவித்ததாக கல்வியமைச்சர் கூறியுள்ளார்.
இந்த நிலமை நாட்டின் கல்வித்துறையின் தரமான வளர்ச்சி தொடர்பில் நம்பிக்கையூட்டும் ஆரம்பம் என்று அவர் கூறியுள்ளார்.
இன்று பெறுபேறுகள் வௌியான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இவ்வாறு கூறியுள்ளார்.
வருங்காலத்தில் நாட்டின் கல்வியில் பல்வேறு சீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட உள்ளதுடன், 13 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியான கல்வியை வழங்குவதற்கான வேலைத் திட்டத்தின் மாதிரியை இந்த ஆண்டில் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.
அதனை 2019ம் ஆண்டு முதல் அனைத்து பாடசாலை கட்டமைப்பிலும் உள்ளடக்கும் விதமாக விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறினார்.

Post a Comment