கல்குடா மதுபானசாலைக்கு எதிராக, போராட தயார் - அம்பிடியே சுமண தேரர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள மதுபான வடிசாலைக்கு எதிராக அனைத்து சமயத்தலைவர்களுடன் வீதியில் இறங்கிப் போராடவுள்ளதாக அம்பிடியே சுமண தேரர் எச்சரித்துள்ளார்.
மட்டக்களப்பு மங்களாராமய விகாரையில் இன்று நடைபெற்ற சர்வ மதத்தலைவர்களின் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட சுமண தேரர், மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள மதுபான வடிசாலை தொடர்பில் அனைத்து மதத் தலைவர்களும் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மக்களுக்கு இன்று முக்கிய தேவையாக இருப்பது மதுபான வடிசாலை அல்ல. அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ள நிலையில், யாருடைய தேவைக்காக இந்த மதுபான வடிசாலை ஆரம்பிக்கப்படவுள்ளது?
மட்டக்களப்பில் கூடுதலாக தமிழ் , முஸ்லிம் மக்களே வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கடந்த கால யுத்தம் காரணமாக பெரும் பாதிப்புகளை எதிர் கொண்டுள்ளனர். இவர்கள் தங்கள் எதிர்கால சந்ததியினரை பாதுகாத்து, வாழவைப்பது தொடர்பில் பெரும் நெருக்கடியில் இருக்கும் நிலையில் இங்கு மதுபான வடிசாலை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கமே இந்த மதுபான வடிசாலை ஆரம்பிக்கும் செயற்பாட்டில் ஆர்வத்துடன் செயற்படுகின்றது.ஆனால் முன்னைய அரசாங்கத்துக்கு எதிராக பொதுமக்களை அணிதிரள வைத்து, அவர்களைத் தோற்கடிப்பதில் எத்தனோல் விவகாரம் முக்கிய பங்காற்றியிருந்தது.
தற்போதைய அரசாங்கம் அதனை மறந்து செயற்பட முனையக் கூடாது.
கிராமங்களில் மதுபான வடிசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்காக இந்த அரசாங்கத்துக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. அவ்வாறு அரசாங்கம் செயற்படுமாக இருந்தால் அனைத்து மதத் தலைவர்களும் வீதிக்கு இறங்கி கல்குடா மதுபான வடிசாலைக்கு எதிராக போராடவும் தயாராக உள்ளோம் என்றும் அம்பிடியே சுமண தேரர் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவர்கள்தான் உண்மையான பெளத்த தேரர்கள். இந்நாநாட்டை ஆழவும் தகுதியானவர்கள்!
ReplyDeleteHe is the "Thera"who publicly abused comunally on minorities recently in Batticaloa.
ReplyDelete