Header Ads



அதிவேகப் பாதையில் வாகனம் நிறுத்தினால், வழக்குத் தாக்கல்

ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய கார­ணங்­கள் இல்­லா­மல் அதி­வே­கப் பாதை­க­ளில் வாக­னங்­களை நிறுத்தி வைப்­ப­வர்­க­ளுக்கு எதி­ராக வழக்கு தொட­ரப்­ப­டு­மென தெற்கு அதி­வே­கப் பாதைக்­குப் பொறுப்­பான மூத்த பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் ஜனக குண­தி­லக்க தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பில் அதி­வே­கப் பாதை­க­ளி­லுள்ள சகல பொலிஸ் காவ­ல­ரண்­க­ளுக்­கும் பணிப்­புரை வழங்­கப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் தொழில்­நுட்­பக் கோளா­று­க­ளாலோ அல்­லது விபத்­து­க­ளாலோ நிற்­கும் வாக­னங்­க­ளைத் தவிர்ந்த ஏனைய வாக­னங்­கள் தேவை­யில்­லா­மல் நிறுத்­தப்­ப­டக்­கூ­டா­தெ­ன­வும் அவர் கூறி­னார்.

கடந்த சில தினங்­க­ளில் இவ்­வா­றான தவ­று­களை இழைத்த சார­தி­க­ளுக்கு எதி­ராக வழக்­கு­கள் தொட­ரப்­பட்டு அப­ரா­தம் வசூ­லிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் அவர் தெரிவித்தார்.    

No comments

Powered by Blogger.