ஏப்ரல் பூலும், முஸ்லிம்களின் இரத்தம் ஆறாக ஓடிய தினமும்..!!
-Ulm Fairoos-
கிருத்தவ படை வீரர்கள் ஸ்பெயின் ஐ வெற்றி கொண்ட போது முஸ்லிம்களை எந்த அளவுக்கு அவர்கள் கொன்று குவித்தார்கள் என்றால் வீதியில் படை வீர்களின் குதிரை செல்லும்போது அதனின் மூட்டு அளவிற்கு இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. முஸ்லிம்கள் முழுவதுமாக நீக்கப்பட்டுவிட்டார்கள் என்பதை அறிந்த அந்த வீரர்கள் (கோழையர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்)
இருந்த போதிலும் இனி முஸ்லிம்களில் எவரேனும் இங்கு இருக்கிறார்கள் என்றால் அவர்கள் தத்தமது குடும்பத்துடன் மராகஸ் (இங்கிருந்துதான் முஸ்லிம்களின் மூதாதையர்கள் ஸ்பெயின் வந்தனர்) சென்று விடுங்கள் என்று அறிவிப்பு செய்தனர். இதற்கு பிறகும் கூட கிருத்தவ படை வீரர்கள் இன்னும் முஸ்லிம்களின் எவரேனும் மீதம் இருக்கிறார்களா என்று வீதி வீதியாக தேடி தேடி அழைந்தனர். எவரேனும் தென்பட்டால் அவர்களை ஷஹீத் ஆக்கினர். சில முஸ்லிம்கள் சிலுவையை தனது கலுத்தில் மாட்டி கொண்டு கிருத்தவ பெயரை வைத்துக் கொண்டனர். ஒரு சில முஸ்லிம்கள் இன்னும் ஒழிந்து கொண்டிருக்கின்றனர் என்று கிருத்தவர்கள் நம்பி வந்தனர்.
இதனை அறியவே அவர்கள் நாடு முழுவதும் ஒரு அறிவிப்பை விடுத்தனர் அதாவது இன்னும் எவரேனும் முஸ்லிம்கள் இருந்தால் அவர்கள் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி அன்று அவரவர் நாட்டுக்க்கு திரும்பி செல்ல வேண்டுமானால் கர்நாதா என்ற இடத்திற்கு வருகை தாருங்கள் என்று அறிவிப்பு செய்தனர். ஸ்பெயின் இல் சாந்தி நிலவி விட்டதால் எந்த வித அச்சமுமின்றி மறைமுகமாக வாழ்ந்து வந்த பல்வேறு முஸ்லிம்கள் இவர்களின் இந்த பொய்யான பேச்சை கேட்டு நம்பி கர்நாதா என்ற இடத்திற்கு
வந்தார்கள். அதன் பிறகு கிருத்தவ ஜெனரல் அவர்களை நம்ப வைத்து ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி அன்று ஒரு கப்பலில் ஏற்றிக் கொண்டு சென்றனர். இது சுமார் ஐந்து ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்புள்ள காலம். இறுதியில் கப்பல் நடுக்கடலில் வரவே அந்த கப்பலை மூழ்கடித்தனர். இவ்வாறு அதிலிருந்த அனைத்து முஸ்லிம்களும் இறந்தனர். இவ்வாறு ஆங்கிலேயர்கள் அந்த நாளாகிய ஏப்ரல் ஒன்றை ஒரு சந்தோஷ நாளாக கருதினர். இவ்வாறு முழு உலகிலும் அப்போதிருந்து ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி அன்று APRIL FOOL ஆக கொண்டாடி வருகின்றனர். இவ்வாறு மக்களை ஏமாற்றி முட்டாளாக்கி வருகின்றனர்.
இதில் வருத்தம் என்னவென்றால் முஸ்லிம்களில் பலர் இந்த உண்மையை அறியாமல் இந்த APRIL FOOL நாளில் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இவர்கள் இந்த தீய பழக்கத்தினால் என்னென்ன கெடுதிகள் சமுதாயத்தில் ஏற்படுகின்றன என்பதை அறிவதில்லை. இதனால் ஒன்று பொய் சொல்லும் பழக்கம் ஏற்படுகின்றன. இரண்டாவது பிறரை ஏமாற்றும் பழக்கம் ஏற்படுகிறது. மூன்று இறை கோபத்திற்கு ஆளாகின்றோம். ஈமான் பாலாகிறது. இவ்வாறு பல சீர்கேடுகள் நம்மில் உருவாகின்றன. இவ்வாறான ஒரு சீர்கெட்ட பழக்கத்தை எந்த மனிதரும் குறிப்பாக முஸ்லிம் பெரு மக்கள் அறவே பேணக்கூடாது. இதை விட்டு தவிர்ந்திருக்க வேண்டும்.

Post a Comment