உலகின் பிரபல அரச தலைவர்கள், ஜனாதிபதிக்கு வழங்கிய உறுதி
இராணுவத்தினர் எவரையும் பிரதிவாதியாக்குவதற்கு தாம் தயாரில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
குருநாகல் பாதுகாப்பு சேவை கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
ஜனாதிபதி குறிப்பிட்டதாவது,
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பு மீதும் அரசாங்கத்தின் மீதும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள், பிரேரணைகள் தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கையை நான் தெளிவாகக் கூற வேண்டும். எனது கொள்கையின் படி இந்த நாட்டின் எந்தவொரு படை வீரரையும் பிரதிவாதியாக்க நான் தயாரில்லை. உலகின் பிரபல அரச தலைவர்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் உறுதி வழங்கியுள்ளனர். எமது நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மக்களின் உரிமைகள், அதேபோன்று படையினர் தொடர்பிலான விடயங்களில் பிரச்சினை ஏற்படுவதற்கு இடமளிப்பதில்லை என அவர்கள் எனக்கு உறுதி வழங்கியுள்ளனர். அனைத்து விடயங்களிலும் அரசாங்கத்துடன் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
Post a Comment