கட்டுநாயக்கவில் 2 ஆடம்பர ஹோட்டல்கள் - ஒன்றை அமைக்கிறது மலேசியா
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், இரண்டு நிலங்களை கொள்வனவு செய்து ஆடம்பர ஹோட்டல்கள் நிர்மாணிப்பது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறித்த ஹோட்டல்களை நிர்மாணித்து பராமரித்து வருவதற்காக இரண்டு நிலங்களும் குத்தகைக்கு விடப்படவுள்ளன.
மலேசியா மற்றும் சிங்கப்பூர் நிறுவனங்களே குறித்த நிலங்களை குத்தகைக்கு எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்மாணிக்கப்படவுள்ள ஒரு ஹோட்டலில் 100 அறைகள் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை இன்றைய தினம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Post a Comment