Header Ads



பிரபாகரனுக்கும், மைத்திரிக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை..!!

1990 களின்ஆரம்பத்தில் பயங்கரவாதத்தின் கோரப்பிடிக்குள் சிக்குண்டு எந்த ஒரு பாதுகாப்பு உத்தரவாதமும் இன்றி பரிதவித்துக்கொண்டும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத துயரங்களை சுமந்து கொண்டுமிருந்த முஸ்லிங்களை பிரபாகரனின் ஆயுதப்பபடை கொன்றொழித்தது மாத்திரமல்லாது வடமாகாண முஸ்லிம்களை இரவோடு இரவாக விடுதலை புலிகள் திட்டமிட்டு, பொருளாதாரம், வாழ்விடங்களை விட்டு பலவந்தமாக ஆயுதமுனையில் முஸ்லிம்களை அகதிகளாக வெளியேற்றினார்கள்.

ஆனால் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, இன்று அதே முஸ்லிம்கள் ஆளும் அரசாங்கத்தின்  பேனா முனையில் மீண்டும் அகதிகளாக்கப்பட்டு கேட்பார் அற்ற நாதியில்லாதவர்களாக நடுத்தெருவில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

அன்று பிரபாகரனாகவாவது 500 ரூபாய் பணத்துடனும் சொப்பின் பேக்குடனுமாகவாவது யாழ் முஸ்லிங்களை வெளியேற்றி அகதிகளாக்கியிருந்தார். ஆனால் ஜனாதிபதி மைத்திரி அவர்களோ அநாதரவான அந்த அகதி மக்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை கூட ஆராயாமல்  நிரந்தர அகதிகளாக்கிவிட்டார். இந்த விடயத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் மைத்திரிக்கும்  அவ்வளவு பெரிய வித்தியாசம் இருப்பதாக நாம் அறியவில்லை.

அன்று புனித மக்காவில் வைத்து  மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் குர்பான் கொடுக்கும் போது ஆட்டை அறுப்பதற்கு பதிலாக பிரபாகரனின் கழுத்தை அறுப்பதாக தான் நினைத்துக் கொண்டு அறுத்தேன். என்ற மர்ஹூம் அஸ்ரபின் ஆணவம் வடகிழக்கு முஸ்லிங்களை புலிகள் நரபலி வேட்டையாடவும் வடக்கு முஸ்லிம்கள்  வெளியேற்றப்பட்டதற்கும் காரணமாக இருந்தார். அந்த தொடக்கத்தில் முளைத்த முஸ்லிம் தலைவர்கள் காலத்துக்கு காலம் வந்த அரசாங்கங்களுக்கு குடைபிடிப்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றோமே தவிர, முஸ்லிம் சமூகம் சார்ந்த எந்த ஒரு விடயத்திலும் உறுதியாக நின்று, வென்று, போராடி எங்களுடைய உரிமைகளை அபிலாசைகளை பெற்றுத்தந்த வரலாறுகளே இல்லை.

மஹிந்த அரசாங்கத்தை கவிழ்த்து கனவுலக ஆட்சி செய்து கொண்டிருக்கும் ரணில் அவர்களை பின்கதவால் ஆட்சிக்கு கொண்டுவர மைத்திரி என்ற ஒரு பசுத்தோல் போற்றிய புலியை ஜனாதிபதியாக்க இப்போதுள்ள முஸ்லிம் தலைமைகள் சாதனை படைத்திருக்கிறார்கள், என்பது இவர்களுடைய தொடர் மௌனம் நிரூபிக்கிறது.

ஆனால் முஸ்லிம் சமூகம் தன்னை பல தடவைகள் தோட்கடித்த போதிலும் கூட மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இப்படியான அநீதியை ஒருபோதும் முஸ்லிம் சமூகத்திற்கு செய்யவில்லை. மாறாக  மனிதாபிமானத்துடன் முஸ்லிம்களை பயங்கரவாத புலிகளிடமிருந்து பாதுகாத்து 
பல அபிவிருத்திகளையும் செய்து கொடுத்திருந்தார்.

மக்களுடைய பேரபிமானம் பெற்று ஜனாதிபதியாக தனித்து நின்று வெற்றி பெற்றிருந்தால் மைத்திரி அவர்களுக்கு ஜனாதிபதி பதவியுனுடைய அதிகாரத்தின் தன்மை என்ன, அதன் பொறுப்புக்கள் என்னென்ன என்பது ஒருவேளை தெரிந்திருக்க வாய்ப்பிருக்கும். ஆனால் அதிஷ்ட லாப சீட்டிலுப்பில் கோடி ரூபாய் பரிசு பெற்றவன் பணத்தின் பெருமதி தெரியாமல் அலட்சியமாக செலவு செய்வது போல் இன்று ஜனாதிபதி பதவிக்குறிய எந்த தகுதியும் இல்லாமல் நடந்து கொள்ளும் மைத்திரி அவர்களை ஜனாதிபதியாக்கியது  இந்த நாட்டு முஸ்லிம்கள் தங்களுக்கு தாங்களே வைத்துக்கொண்ட சூனியமாகும்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் ஞானசார தேரர் அட்டகாசம் செய்த போது அதனை தடுக்க வில்லை என்ற ஒரே ஒரு குற்றச்சாட்டை மாத்திரம் வைத்துக் கொண்டு மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இனவாதியாக சித்தரித்தார்கள். உண்மையில் மஹிந்தவுக்கும் ஞானசாரவுக்கும் இடையே எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை மென்மேலும் உறுத்திப் படுத்தும் விதமாக ஜனாதிபதி பதவியேற்று சில நாட்களில் மைத்திரி அவர்கள் ஞானசார தேரருடன் மூடிய அறையில் நடத்திய மந்திர ஆலோசனைகளும் அதன் பின்னரான ஜனாதிபதி மாளிகையில் ஞானசாரவுக்கு மைத்திரி வழங்கிய செங்கம்பல வரவேற்புகளும் சாட்சிகளாக அமைகின்றன.

தம்புள்ளை விவகாரம் அதே போன்று மரிச்சுக்கட்டி விவகாரம் இது அனைத்திற்கும் பின்னனியில் ஞானசாரவின் கடந்த கால பிரச்சாரங்களும் அவருடைய செயற்பாடுகளும் விஞ்ஞாபனமும் இருக்கிறது, என்பதை முஸ்லிம் சமூகம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். 

அதனால் தான் சொல்கிறோம், இந்த நாட்டில் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்வதற்கு மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ வந்தாலேயே அன்றி வேறு இங்கிருக்கின்ற எந்த அரசியல் தலைவராலும் முஸ்லிம்கள் விடயத்தில் உத்தரவாதம் வழங்க முடியாது.

அப்படியானால் இப்போதுள்ள அதிகாரம் கொண்டவர்களும் இனவாதிகளும் அவர்களுடைய பூசாரிகளும் அவர்களது தேவாலயத்தில் பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிற்கும் எமது முஸ்லிம் தலைமைகளும் பலவீனப்படுத்தப்பட்டு மக்களால் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை முஸ்லிம் சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதேநேரம் முஸ்லிம் சமூகத்தை சூடேற்றி ஏமாற்றிய முஸ்லிம் தலைமைகள் இந்த அவலநிலைக்கு இதுவரையில் எந்தவிதமான எதிர்ப்புகளையும் வெளியிடமால் மௌனிகளான தங்களுடைய பதவி இச்சையை தீர்த்துக்கொள்ள நல்லாட்சிக்கு குடைபிடித்திக் கொண்டிருக்கும் முஸ்லிம் தலைமைகள் நாளை மறுமை நாளில் அல்லாஹுவிடத்தில் பொருப்புக் கூறவேண்டியவர்கள் என்பதை ஞாபகப் படுத்த விரும்புகிறேன்.

அஹமட் புர்கான்

4 comments:

  1. No worrys.all political games.after electoin my3 will change the decision.otherwise majourity won't vote for yahapalana.pls understand all entire muslims and mps

    ReplyDelete
  2. காலம் கடந்த ஞானம் தம்பி. பலஸ்தீனத்திற்கு 1 மில்லியன் டாலர்களை வழங்கியும் புலிகள் மூதூரில் முஸ்லிம்களை விரட்டிய வேளையில் மீள குடியேற்றிய போதும் வெறும் 9% வாக்குகளை அளித்து நன்றி காட்டிய முஸ்லிம்களுக்கு சரியான பாடம்.

    ReplyDelete
  3. 1242. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
    நபி(ஸல்)அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூ பக்ர்(ரலி) வெளியில் வந்தார்.........'உங்களில் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக முஹம்மத் இறந்துவிட்டார். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருப்போர் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்: மரணிக்கமாட்டான்......
    ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 23.

    ReplyDelete
  4. ரெண்டும் நாய்கள் தான் .

    ReplyDelete

Powered by Blogger.