தேசாபிமானிகள் பட்டியலில், முஸ்லிம்கள் எவரும் இல்லையா..?
ஆங்கிலேயர்களால் தேசத்துரோகிகளாக பிரகடனப்படுத்தப்பட்டவர்களை தேசாபிமானிகள் என பிரகடனப்படுத்தவென கண்டியில் நடைபெற்ற விழாவின் போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் முஸ்லிம்கள் எவரும் இடம் பெற்றிருக்கவில்லை.இவ்வாறு தேசத்துரோகிகளாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தவர்களை தேசாபிமானிகள் என பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த புதனன்று (1.3.2017) கண்டியில் கைசாத்திட்டார். இந்த வைபவம் தலதா மாளிகையின் மங்குல்மடுவ எனும் மண்டபத்தில் நடைபெற்றது.
ஆங்கிலேயர்களால் சில முஸ்லிம்களும் தேசத்துரோகிகள் என பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. இந்தப் பிரகடனத்தை இரத்துச் செய்யும்படி கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் ஜனாதிபதியிடமும் புத்த சாசன, நீதியமைச்சர் கலாநிதி விஜேதாஸ ராஜபக் ஷ விடமும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதை இவர்கள் ஏற்றுக் கொண்டதாகவும் ஊடக செய்திகள் கூறின.எனினும், கண்டியில் நடந்த விழாவில் 89 பேர் தேசாபிமானிகளாக பிரகடனப்படுத்தப்பட்ட பட்டியலில் எந்த முஸ்லிம்களின் பெயரும் இடம் பெறவில்லை.
இந்த வைபவத்தில் முஸ்லிம் விவகார, தபால் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், அமைச்சர் கயந்த கருணாதிலக, அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல, அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க உட்பட பிரதி அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், மாகாண அமைச்சர்கள் பெருந் தொகையில் கலந்து கொண்டார்கள்.


இதில் இருந்து விளங்குவது என்னவென்றால் ? வாசகர்களாகிய நாங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.
ReplyDeleteஆம். இதிலிருந்து விளங்குவது என்னவென்றால், ஆங்கிலேயர் காலத்திலும் பிரிவினைப் போராட்ட காலத்திலும் முஸ்லிம்கள் எச்சந்தர்ப்பத்திலும் இந்நாட்டுக்கு தூரோகிகளாக இருந்ததில்லை. விசுவாசமானவர்களாகவே இருந்துள்ளனர் என்பதுதான் அது. அப்படியானவர்கள்தான் இந்நாட்டை நீதமுடன் ஆள்வதற்கும் தகுதியானவர்கள் என்பதுதான் அதன் அர்த்தம்.
ReplyDelete