Header Ads



நசீர் அஹமட் முறைப்பாடு, பஷீரிடம் வாக்குமூலம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தவிசாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான பஷீர் சேகுதாவூத் வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக இன்று (28) மதியம் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமைய பஷீரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு அவதூறை ஏற்படுத்தும் வகையில் தருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட உண்மைகள் என்ற பெயரில் நூல் ஒன்றை அச்சிட்டு விநியோகித்தமை சம்பந்தமாக இந்த முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரி தெரிவித்துள்ளார்.


1 comment:

  1. தன் பல்லை குத்தி மற்றவர்களுக்கு நாற்றத்தை கொடுக்கும் வேலையை ஆரம்பித்துவிட்டார்கள்,இதன் பிறகு அவர் அவருடைய சீடிகளை விடுவார் இவ்வாறே சமூதாயம் நாறும்.அரசாங்கம் தனக்குத் தேவையானது போன்று சட்ட திட்டங்களை நமக்குத் திணிக்கும்,

    ReplyDelete

Powered by Blogger.