Header Ads



தன்னுடை மத வழிபாடுகளை முன்னெடுப்பதற்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் - ரணில்

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் போது நாட்டை பிரிக்காமல் எப்படி அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். நாங்கள் யாரும் நாட்டை பிரிப்பதாக கூறவில்லை. ஒற்றையாட்சிக்குள் அதிகாரத்தை பகிர்ந்தளித்து ஒவ்வொரு பிரதேச மக்களும் தமது செயற்பாடுகளை சுதந்திரமாக முன்னெடுப்பதற்கும் தன்னுடை மத வழிபாடுகளை முன்னெடுப்பதற்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் மாத்திரம் கோரவில்லை. மாறாக தென் மாகாண முதலமைச்சரும் அதிகாரத்தை பகிர்ந்தளிக்குமாறு கோருகின்றார். ஆகவே பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மருதானையில் 33 அடி உயரமான புத்தர் சிலையை திறந்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.