அம்பாந்தோட்டை துறைமுகத்தினை நிறுவ 1350 பில்லியன், விற்பனை விலை 1100 மில்லியன்கள் மாத்திரமே
அம்பாந்தோட்டை துறைமுக விவகாரத்தில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் பங்களிப்பு எத்தகையது என்பதை அவர் நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியில் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சவால் விடுத்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அம்பாந்தோட்டை துறைமுகத்தினை விற்பனை செய்யாமல் பொருளாதார எழுச்சியை நாட்டில் ஏற்படுத்த முடியாது என மத்திய வங்கி ஆளுனர் அண்மையில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் கூறியிருந்தார்.
அவரின் கூற்று நாடு எந்த அளவு பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது என்பதை காட்டுகின்றது. பாராளுமன்றத்தில் பிரதமர் நாம் மிகப்பெரிய கடன் குகைக்குள் நாம் சிக்கிக்கொண்டுள்ளோம் என்றும் அதிலிருந்து மீண்டு வருவதற்கு துறைமுகங்கள் உள்ளிட்ட நாட்டின் பல சொத்து்களை விற்பனை செய்ய நேரிடும் என்றார்.
அதனால் இன்று பொருளதார நெருக்கடியிலிருந்து மீண்டெலுவதற்கான சரியான வழியாக அரசாங்கம சொத்துக்களை விற்பனை செய்வதை அரசாங்கம் சிறந்த வழியென்று கருதுகிறது. ஆனால் அரச சொத்துக்களை விற்பனை செய்து பெற்றுக்கொள்ளும் பணத்தில் நீண்ட நாட்கள் பொருளாதார கட்டமைப்பினை வலுவாக பேண முடியாது சிறிது காலத்தில் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிடும்.
பிரேமதாஸ ஆட்சி காலத்தில் சொத்துக்கள் மக்கள் உடமையாக்கப்படுதல் என்ற பேரில் விற்பனை செயற்பாடுகள் இடம்பெற்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் காலத்திலும் அந்தச் செயற்பாட்டில் மாற்றமிருக்கவில்லை. தற்போதைய ரணில் மைத்திரி கூட்டு ஆட்சியிலும் தனியார் அரச நிறுவனங்களின் கூட்டு செயற்பாடுகள் என்ற பேரில் அரச சொத்துக்கள் விற்பனை செய்யப்படுகின்றது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தினை நிறுவ 1350 பில்லியன் டொலர்கள் கடனாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இதனை விற்பனை செய்வதற்கா கோரப்படும் விலை 1100 மில்லியன்கள் மாத்திரமே கோரப்பட்டுள்ளது. இந்த பணத்தை கொண்டு எத்தனை வருடம் நாடு அபிவிருத்தி அடைய போகின்றது என்ற கேள்விக்குறி சகலருக்குமுள்ளது.
அதேபால் இந்த விவகாரத்தில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் பங்களிப்பு எத்தகையது என்பதை நாட்டு மக்களுக்கு வெளிப்டையாக கூற வேண்டும் என்று சவால் விடுக்கின்றோம்.
காரணம் தற்போது பிரதமர் தலைமையிலான பொருளாதார குழுவில் உள்ள அமைச்சர் மலிக் சமரவிக்ரம, சரித ரத்வத்தே மற்றும் பாஸ்கரலிங்கம் ஆகியோரே அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் குறித்து பேசுகின்றது அதனால் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு இந்த பகிரங்க சவாலை விடுகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment