பெந்தோட்டைக் கடலிலிருந்து, ஜனாஸா மீட்பு
பெந்தோட்டைக் கடலில் குளிக்கச் சென்றபோது, கடலில் மூழ்கிய மூன்று சிறுவர்களில், தர்கா நகரைச் சேர்ந்த 15 வயதுடைய மொஹமட் இம்சான் எனும் சிறுவனின் சடலம், இன்று மாலை 6 மணியளவில் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னதாக சிறுவர்கள் இருவரை, பிரதேசவாசிகள் மீட்டுள்ளதுடன், மொஹமட் இம்சானையும் மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே, சடலம் மீட்கப்பட்டுள்ளது. தர்கா நகரைச் சேர்ந்த 13 வயதுடைய மீட்கப்பட்ட இரு சிறுவர்களும், பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஒருவர் இறந்துவிட்டர்
ReplyDeleteஇன்னொருவர் வைத்தியசாலையில்,
மற்றவருக்குடன் நான் நேற்று பேசினேன். அவருக்கு ஒன்றுமில்லை. வீட்டில் இருக்கிறார்.