Header Ads



கண் பார்வை ஆற்றல்


6/6, 6/12 இப்படி கண்ணின் பார்வை ஆற்றலை அளக்கிறார்களே! அது எப்படி என்று உங்களுக்கு தெரிகிறதா?

6/6 என்பது நார்மல் அதாவது 6_மீட்டர் தூரத்தில் உள்ள எழுத்துக்களை 6 மீட்டரிலேயே உங்களால் படிக்க முடியும் என்பதை குறிக்கிறது.

6/12 என்பது கண் பார்வையில் ஆற்றல் குறைவு . மற்ற பேர்கள் அதாவது கண்ணில் கோளாறு இல்லாமல் நார்மலாக இருப்பவர்கள் 12 மீட்டரில் படிக்க முடிவதைப் படிக்க இவர்கள் 6 மீட்டர் கிட்டக்கப் போய் படிக்க வேண்டும்... அல்லது இவர்கள் 6 மீட்டரில் படிப்பதை மற்ற பேர் 12 மீட்டரில் படிக்க வேண்டும்.

இதைப் போல் 6/36 என்று அதிகரித்துக் கொண்டு போய் 6/66 எல்லாம் பகலில் எருமை மாடு கூட தெரியாது.

இப்போதெல்லாம் நல்ல கண் பார்வையை 20/20 என்கிறார்கள்.

"அவர்களும் நீங்களும் (யுத்த களத்தில்) சந்தித்துக் கொண்ட சமயத்தில் அவர்களுடைய தொகையை உங்கள் கண்களுக்குக் குறைத்தும் , உங்களுடைய தொகையை அவர்களுடைய கண்களுக்குக் குறைத்தும் காண்பித்ததெல்லாம் அல்லாஹ் முடிவு செய்த காரியம் நடைபெற்று அவர்களை அழித்துத் தீருவதற்காகத்தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

அல்லாஹ்விடமே எல்லா காரியங்களும் சென்று முடிவடைகின்றன. (குர்ஆன் 8 : 44)

அல்லாஹ் கண் பார்வை ஆற்றலை எப்படி உபயோகப்படுத்துகிறான் பாரத்தீர்களா?

"பத்ரு யுத்தத்தில்... நிராகரிப்பவர்களாகிய இவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களை தங்களை விட இரு மடங்காகத் தங்கள் கண்ணால் கண்டனர். (குர்ஆன் 3 : 13)

அல்லாஹ் இங்கு கண் பார்வை ஆற்றலை வேறு விதமாக பயன்படுத்தி இருக்கிறான்.

-Rahmath Rajakumaran

No comments

Powered by Blogger.