ஜனாதிபதியினால் முஸ்லிம்கள் ஏமாற்றம், பிரதமர் மௌனம் - அப்துர் ரஹ்மான் சீற்றம்
- SNM.Suhail-
பாதுகாக்கப்பட்ட வில்பத்து வன பிரகடனத்தில் முஸ்லிம் மக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்காது இனவாதிகளின் நோக்கத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்றியுள்ளதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கடுமையாக குற்றம் சுமத்தியுள்ளது.
மஹிந்த அரசாங்கம் ஆரவாரமாகவும் வெளிப்படையாகவும் இனவாதிகளுக்கு சார்பாக செயற்பட்டு அவர்களின் நோக்கங்களை நிறைவேற்ற துணை போனது. ஆனால் இந்த அரசாங்கம் மிகவும் அமைதியாகவும் சூட்சுமமான முறையிலும் இனவாதிகளுக்கு உதவுகிறது. ஜனாதிபதியின் இவாறானதொரு பிரகடனத்திற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளும் துணை போயுள்ளமை கவலையளிப்பதாகவும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் இது தொடர்பில் விடிவெள்ளிக்கு மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியின் ரஷ்யாவுக்கான விஜயத்தின் மத்தியில் வில்பத்து சரணாலயத்திற்கு வடக்கே அமைந்துள்ள நான்கு பிரதேசங்களை உள்ளடக்கி அவற்றை பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானியில் கையொப்பமிட்டுள்ளார்.
வில்பத்து விவகாரத்தில் முஸ்லிம் தரப்பின் நியாயத்தையும் பிரச்சினைகளையும் காதுதாழ்த்தாது ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்திருக்கின்றமை தெளிவாகின்றது. அண்மையில் சைட்டம் விவகாரம் பூதாகரமாக வெடித்தபோது அனைத்து தரப்புடனும் பேசி சமரசத்துக்கு வரலாம் என குறிப்பிட்ட ஜனாதிபதி, ஏன் இவ்விடயத்தில் முஸ்லிம்களின் கருத்துக்களை ஆராயவில்லை என கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது.
மறிச்சிக்கட்டி உள்ளிட்ட பகுதிகள் முஸ்லிம் மக்களின் பூர்வீக காணிகள் என அண்மையில் அங்கு சென்று கள ஆய்வை மேற்கொண்டு வந்த சூழலியலாளர்கள் குறிப்பிட்டும் ஜனாதிபதி இவ்வாறு வர்த்தமானி அறிவித்தலில் ஒப்பமிட்டிருப்பது முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இது முஸ்லிம் மக்களின் உரிமைகளில் கைவைக்கும் செயற்பாடாகும். மக்களின் சொந்த காணிகளை திட்டமிட்டு அபகரிக்கும் செயற்பாடாகும். இந்த அரசாங்கம் மக்களின் உரிமைகளை கொடுப்பதற்கு பதிலாக பறிக்கிறது. இவர்களிடம் எவ்வாறு சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியும் எனும் கேள்வி எழுந்திருக்கிறது.
இதேவேளை, இவ்விடயத்தில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் பெரும் தவறினை இழைத்திருக்கின்றனர். வில்பத்து விடயத்தில் அவர்களால் வெறும் விளம்பரத்திற்காக ஹோட்டல்களில் கலந்துரையாடல்களை நடத்தவே முடிந்தது. ஆனால், முஸ்லிம் எம்.பி.க்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதியை நேரடியாக சந்திக்க முடியாது போனது.
இது இரண்டாவது வர்த்தமானி பிரகடனமாகும். 2012 ஆம் ஆண்டு இதே போன்றதொரு வர்த்தமானி பிரகடனம் வெளியிடப்பட்டது. எனினும் அவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்ட பகுதி ஒப்பீட்டளவில் தற்போது பிரகடனப்படுத்தப்பட்ட பகுதியை விடச் சிறியதாகும். இந்நிலையில் முதலாவது பிரகடனம் வெளியிடப்பட்டமை 2015 ஆம் ஆண்டுவரை தனக்குத் தெரியாது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அப்போதும் அவர் அமைச்சரவையில் அங்கம் வகித்தார்.
அச்சமயம் முசலி பிரதேச சபை அமைச்சர் ரிஷாத் தலைமையிலான கட்சியின் ஆட்சியிலேயே இருந்தது. அவ்வாறிருந்தும் அன்று அதனை தடுத்து நிறுத்துவதற்கான எந்தவித முயற்சியையும் அவர்கள் செய்யவில்லை. அதன் பிற்பாடு பல தேர்தல்கள், சந்தர்ப்பங்கள் வாய்த்த போதிலும் 2012 இன் வர்த்தமானி பிரகடனத்தை இரத்துச் செய்வதற்கான எந்த முயற்சிகளையும் அமைச்சர் ரிஷாடோ ஏனைய முஸ்லிம் தலைவர்களோ மேற்கொள்ளவில்லை.
அதற்கான எதிர்ப்புகளைக் கூட கூட்டாக வெளியிடவில்லை. இன்றும் அமைச்சர் ரிஷாடும் ஏனையோரும் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் நிலையில்தான் மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியிருக்கிறது. இதன் மூலம் 2012 இல் வனப் பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்ட பகுதியை விட பெரும் பரப்பு 2017 இல் உள்வாங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மிகவும் தந்திரமாக செயற்பட்டே இந்த விடயத்தை மேற்கொண்டுள்ளார். இவ்விடயத்தில் பிரதமர் தொடர்ந்தும் மெளனமாகவே இருக்கின்றார். நாட்டின் நிர்வாகத்தை முழுமையாக முன்னெடுக்கும் அவர் எதுவும் தெரியாதது போல இருக்கின்றார். எங்களை இந்த அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்றுகின்றது. நாம் ஓர் அபாயகமான நிலைக்கே தள்ளப்பட்டிருக்கிறோம்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணிதான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவுக்கு முதன் முதலாக ஆதரவளித்த முஸ்லிம் தரப்பாகும். எனினும் ஏனையோர் பணத்தையும் பதவிகளையும் சலுகைகளையும் பெற்றுக் கொண்டே அவருக்கு ஆதரவளித்தார்கள். அதனால்தான் இன்று சமூகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க முடியாத கையாலாகாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
எனினும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இது விடயத்தில் போராடவும் மக்கள் சார்பாக நின்று குரல் கொடுக்கவும் முழு உரிமையையும் கொண்டுள்ளது என்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் மேலும் குறிப்பிட்டார்.

Mr. அப்துர் ரஹ்மான் நீங்களும் முற்றிலும் சரி. எங்களது பினாமிகள் நல்லாட்சி நல்லாட்சியென்று ஒற்றிக்கொண்டிருக்கும்வரை இப்படித்தான் நடக்கும். இதுமட்டுமல்ல இன்னும் நிறயவே நடக்கவாய்ப்பிருக்கிறது. எனவே தயவு செய்து எங்களது சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க சகல முஸ்லீம் அமைச்சர்களும், பாராளுமன்ற சற்று கொஞ்சம் சிந்திப்பீர்களா? ஏன் உங்களுக்கு சமூகம் பற்றி என்னம்தோன்றுதில்லியா. பதவிகளை கைப்பற்றுவதிலே குறியாரிருக்காமல் சற்று அயலவர்கள் கஷ்டத்திலும் பங்கெடுக்கள்.அப்பதான் உங்களுது வாழ்க்கையும் பரக்கதாக அமையும்.
ReplyDeleteதமிழர் விடுதலை கூட்டணியை பாருங்கள். அவர்கள் செய்யும் தியாகத்தை. அவர்கள் எங்க நீங்கள் எங்கே.
என் இனியே சகோதரா சஹோதிரிகளே எதிர்காலத்தில் எங்களது உரிமைகளை வென்றெடுப்பதன்றால் நாங்கள் ஜேவிபியினரை பலப்படுத்தவெண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஏனனில் நாங்கள் காலகாலமாக பலமுறை SLFP, UNP என்று ஏமாற்றப்படுகிறோம். இவர்கள் இருவருடைய ஆட்சியிலும் சிறுபான்மைக்காக குரல்கொடுக்கக்கூடியவர்கள் ஜேவிபினர்தான். எங்களுது SLMC நாட்டிலிருக்கிறதா இல்லியாவென்று புரிந்துகொள்ள முடியாமலிருக்கிறது. ஏனனில் election இன்னுமில்லியே!
ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.
Delete(அல்குர்ஆன் : 16:97)
JVP is also not speaking in favour of Muslims in the Wilpattu issue.
ReplyDeleteTrue
DeleteTrue
DeleteDon't select any Muslim to parliament. All of them are casted in same mould.
ReplyDelete