Header Ads



றிஷாட் இராஜினாமா செய்ய வேண்டும் - பஷீர்

-Basheer Segu Dawood-

வில்பத்துவில் முஸ்லிம்களின் வாழிடங்களை உள்ளடக்கி ஒரு லட்சம் ஏக்கர் காணியை வன இலாக்காவுக்காக ஒதுக்கி வெளியிடப்பட்டுள்ள அரசிதழ் அறிவிப்பை மீளப் பெறுமாறு கோரி ஒரு காலக் கெடுவை விதித்து இக்காலத்துள் அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்படாவிட்டால், தான் அமைச்சுப் பதவியைத் துறப்பேன் என்று பகிரங்கமாக அமைச்சர் றிஷாட் அறிவிக்க வேண்டும். மீளப் பெறாவிட்டால் காலக்கெடு முடிந்தவுடன் பதவித் துறப்புக் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவிட்டு நாடாளுமன்றத்தின் பின் வரிசை ஆசனத்தில் அமர வேண்டும்.

இந்த இராஜினாமா முஸ்லிம் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிப்பைத் தெரிவிக்க எடுக்கப்பட்ட கொள்கை ரீதியான முடிவாக அமையுமே அன்றி, அரசை எதிர்ப்பதாக அமையாது. எனவே அவரது கட்சியைச் சேர்ந்த பிரதியமைச்சரோ அல்லது வேறு எவருமோ இராஜினாமாச் செய்ய வேண்டியதில்லை.

தலைவர் அஷ்ரஃப் தனது பாராளுமன்ற உறுப்புரிமையையே 1994 இல் ஒரு சவாலுக்காக இராஜினாமாச் செய்தார். 1998 இல் என்று நினைக்கிறேன் அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்த கடிதத்தை அன்றைய ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு அவரே நேரடியாகக் கொண்டு கையளித்து விட்டு, அரச பங்களாவை விட்டு குடும்பத்தோடு வெளியேறி தனது சொந்த தொடர்மாடி வீட்டில் குடியேறினார். மேலும் அரச வாகனங்களைக் கைவிட்டு தனது சொந்த வாகனத்தை உபயோகித்தார். தலைவரின் அதிருப்தி அம்மையாரால் சரி செய்யப்பட்ட பின் பதவியைத் தொடர்ந்தார். சத்திரிக்காவினால் நமது சமூகம் மற்றும் நமது கட்சி சார்ந்த விடயங்கள் கணக்கில் எடுக்கப் படாமல் விடப்பட்ட வேளை இரண்டு தடவைகள் காரசாரமான பல பக்கக் கடிதங்களை ஜனாதிபதிக்கு வரைந்து தனது அமைச்சுப் பதவியை தூசென தூக்கி வீசத் தயாரானார்.

றிஷாட் பதியுதீன் இவ்வாறு செய்யத் துணிந்தால் உண்மையான மக்கள் பிரதிநிதி என நிரூபிக்கும் வாய்ப்புக் கிடைக்கும், இவரது கட்சியில் வரப்பிரசாதங்களுக்காக மட்டும் இருப்போர் அடையாளம் காணப்படுவர், எதிர்க் கீரைக்கடைகள் மகிழ்ச்சி அடைந்தாலும் அவற்றின் தலைமைகள் செல்வாக்கு இழந்து "தள்ளாடும்", முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைவர்கள் பதவி ஆசை மட்டுமே கொண்டவர்கள் என்று நீண்ட காலமாக நம்பி வரும் ஏனைய சகோதர இனங்களின் அபிப்பிராயம் மாறும், மீண்டும் முஸ்லிம் சமுதாயத்துக்கு அரசியலில் பேரம் பேசும் சக்தி அதிகரிக்கும், அழிந்து போன முஸ்லிம் தனித்துவ அரசியல் முத்திரை நம் சமூகம் எனும் அஞ்சலுறையில் ஆழப் பதிக்கப்படும்.இவை மட்டுமல்லாது ஒரு முஸ்லிம் கட்சித் தலைவர் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போதோ, அல்லது ஒர் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான வேறு எந்த சக்தியினது நிகழ்ச்சி நிரலுக்காகவோ அன்றி தமது சமூக நலனுக்காக பதவி துறந்த ஒரு வரலாறு நீண்ட காலத்தின் பின் மீண்டும் எழுதப்படும். இவ்வாறு இன்னும் பல சமூக நலன்கள் ஏற்படும். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தூய்மைப்படவும் வாய்ப்புகள் அதிகம்.

இல்லாவிட்டால் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அனைவரும் குற்றவாளிகள்.ஆனாலும் 'ஒருவரே' அகப்பட்டுள்ளார் என்ற முஸ்லிம் இளைஞர்களின் அபிப்பிராயம் தொடர்ந்தும் இலங்கை அரசியலில் தொங்கிக் கொண்டே இருக்கும்.

இந்த எனது பார்வையை நான் ஒரு சுயாதீனமான அரசியல் அவதானி என்ற அடிப்படையில் மாத்திரமே பதிவிடுகிறேன்.

" அச்சம் தவிர் "


7 comments:

  1. பசிர் சேகுதாவூத் அவர்கள் முஸ்லிங்களின் பிரச்சனையின் போது தனது அமைச்சர் பதவியை பல தடவைகள் ராஜினாமா செய்து விட்டவர். இப்பொழுது ரிசாட் பதியுதீன் அவர்களுக்கு ராஐனாமா பன்ன சொல்கின்றார்.

    ReplyDelete
  2. கௌரவ ரிஷாத் பதுர்தீன் அவர்களே, சமூகத்துக்காக எதையும் செய்வேன் என்பீர்கள். இதுதான் சந்தர்ப்பம். அரசிடம் பேசிப்பாருங்க. சரிவராவிட்டால் எடுத்து வீசிட்டு போயிட்டேரிருங்கள். இந்தசந்தர்பத்தில்தான் நமது சமூகத்துக்கு கைகொடுக்கவேண்டும். அனாதரவற்ற நிலையில் யார் வருவரென எதிர்பார்த்தவண்ணமுள்ளது. ஆகவே பட்டம் பதவியை பற்றி சிந்திக்காமல் சமூகத்துக்காக குரல் கொடுங்கள். உங்கள் பின்னால் நமது முழு சமூகமும் அணிதிரளும். மேலும் அல்லாஹ் இதைவிட பலமடங்கு பெரிய பட்டத்தை, கௌரவத்தை உங்களுக்கு கொடுப்பான்.

    ReplyDelete
  3. இந்த பசீர் எப்போதும் எட்டாக்கணிக்குதான் ஆசைபடுகின்றார் இவரின் பகல் கனவிட்கு எல்லையே இல்லை பாவம்!பசீரே நீங்கள் ஆளுமை மிக்க மக்களின் சேவகன் அமைச்சர் அஸ்ரபை நேரடியாக பார்திருப்பீரோ என்று எனக்கு ஒரு சந்தேகம் ஏனெனில் மக்களுக்கு சேவை செய்ய தானக முன்வந்து தன்னை அர்பனிப்பு செய்த அஸ்ரப் எங்கே உங்களை போன்ற இந்த ரிசாத் எங்கே? ஏன் ரிசாத் நீங்கள் கடந்த ஜனாதிபதி தேர்லகளுக்கு முன்னால் என்ன முடிவுகள் எடுத்து உங்கள் குள்ளநரி சிந்தனைகளை வெளிப்படுத்தினீர்கள் இதுமக்களுக்கு தெரியாதா? அப்போது இந்த முஸ்லிம்மக்ளை குப்பையில் தூக்கி எறிந்தீர்களே பின்பு வள்ளம் தாண்டதால் தெப்பத்தை பிடித்து தன்னை ரிசாத் காப்பாற்றிக் கொண்டார் ஆனால் நீங்கள் தாண்டுவி்ட்டீர் இந்தக்கதை மக்களுக்குத் தெரியாதா?

    ReplyDelete
  4. மேலும் அவருடன் யார் பதவிக்காக ஒட்டிக்கொண்டிருக்கின்றார்கள் என்று தெரியவருமென்று கூறியுள்ளீர் அதை தெரிவதற்றகு முன் ரிசாத் எப்படி அமைச்சு பதவியில்லாமல் இருப்பார் அவரால் எட்ட முடியாத தேசிய தலைவராக ஆகுவதற்கு ஆசைப்படும் இவர் தன்னிடம் கைவசமுள்ள பதவியை அவர் இழப்பாரா? மேலும் ரவூப் ஹகீம் அந்த தேசிய பட்டியலை உங்களுக்கு தந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்?ஒன்றுமட்டும் உண்மை தேசிய பட்டியல் என்ற ஒன்று இல்லாவிட்டால் ரவூப் ஹகீமால் கட்சியை இழகுவாக அபிவிரித்தி அடைய செய்ய முடியும்.மேலும் பிரதேசவாதம் ஒட்டியுள்ள உங்களை போன்ற உருப்பினர்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் அமைச்சர் அஸ்ரப் காலத்திலிந்தீர்கள் ஏன் அந்த கிழக்குமாகன மைந்தன் தனக்கு பின் கட்சி தலைவர் ரவூப் ஹகீமை பிரகடனம் செய்திருந்தார் அவருக்குத்தான் முஸ்லிம்காங்கிரஸை உருவாக்க கண்டிமக்களின் பங்களிப்பு என்ன அதிலும் ரவூப் ஹகீமுடைய பங்களிப்பு என்னவென்று தெரிந்திருந்தார் மேலும் இந்த கட்சிக்காக பேருவளை மக்களின் பங்களிப்பம் அவருக்குத்தான் நன்றாக தெரிந்திருந்தார் இந்த உண்மைகளை மக்கள் நன்றாக தேடி தெரிந்து கொள்ள வேண்டும் இதன் மூலம் கட்சியை வளர்பதற்காக ரவூப் ஹகீமின் ஆரம்ப பங்களிப்புகளை பற்றி மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்

    ReplyDelete
  5. Basheer is joking wuth Rishard.

    ReplyDelete
  6. எதையாவது புதுசு புதுசு சொல்லி மக்களை குழப்பி.கலங்கின குட்டையில் மீன் பிடிக்க பார்க்கிறீங்க.

    ReplyDelete

Powered by Blogger.