வசீம் கொலை - ஒரு வருடமாக சிறையிலுள்ள அனுராவுக்கு மீண்டும் விளக்கமறியல்
றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை சம்பவம் தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
அனுர சேனாநாயக்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி டேல் குணரத்ன, குற்றப் புலனாய்வு திணைக்களம் தொடர்பாக ஊதானசீனமாக விசாரணை நடத்தி வருவதால், தனது தரப்பு வாதி சுமார் ஒரு வருட காலமாக விளக்கமறியலில் இருந்து வருவதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து வாதங்களை முன்வைத்த குற்றப் புலனாய்வு திணைக்களம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க, புதைக்கப்பட்டு தேண்டி எடுக்கப்பட்ட சாட்சியங்களை அடிப்படையாக கொண்டு குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை நடத்துவதாகவும், விசாரணையில் காணப்படும் இரகசிய தன்மை மற்றும் சிக்கல்களை கவனத்தில் கொண்டு நியாயமான காலத்தை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை அனுர சேனாநாயக்கவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment