ஹிஸ்புல்லாஹ்வின் சவாலை, ஏற்பாரா ஹக்கீம்..?
தேசிய ரீதியில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் - சவால்களை எதிர்கொள்ள முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்றினை உருவாக்க வேண்டும் என வலியுறுத்திய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அதனை முஸ்லிம் காங்கிரஸ் முன்னின்று செய்யுமாயின், முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்கத்துக்கு தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் தான் செய்வதாக உறுதியளித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அதிர்வு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:-
சமகாலத்தில் முஸ்லிம்கள் தேசிய ரீதியில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். இது காலத்தின் தேவையாகவும் உள்ளது.
இதற்கு முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்று தோற்றுவிக்கப்பட வேண்டும். இதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவமே முன்னின்று செய்ய வேண்டும். அது அதற்குத் தயார் எனில் ஏனைய தரப்புக்களை ஒன்றிணைக்கும் பொறுப்பினை நான் ஏற்பேன்.
அது மட்டுமல்லாது, முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்கப்படுமாயின் அதற்குத் தேவையான செயலகத்தை உருவாக்குவதற்கு தான் முழு ஒத்துழைப்பையும் செய்வேன் எனவும் இதன்போது இராஜாங்க அமைச்சர் உறுதியளித்தார்.
-R.Hasan-

ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இக்லாஸூடன் சிந்திக்கின்றார் .பாராட்டுக்குரியது .ஆனால் சமூக ஒற்றுமை விடயத்தில் ஹக்கீமிடம் இக்லாஸை எதிர்பார்த்தால் அங்கு ஏமாற்றமே கிடைக்கும் .
ReplyDeleteகடந்த காலத்தில் ஹிஸ்புல்லாஹ் எவ்வாறு நடந்து கொண்டாலும் தற்போதுள்ள நிலையில் மிகவும் உன்னிப்பாக சமுதாயத்துக்காக சிந்திக்க ஆரம்பித்து விட்டார் என்றுதான் கூற வேண்டும்.மிகவும் அருமையான கருத்தை முன் வைத்துள்ளார்கள்.இதனை சாதகமாக அனைத்து முஸ்லிம் தரப்பும் ஏற்று செயல்பட முன்வர வேண்டும்.இது காலந்தின் தேவை. தேர்தல் காலத்தில் வேர்வேராக சென்றாலும் தற்போதைய நிலையை சமாளிப்பதற்கு ஓன்று பட வேண்டும்.உண்மையிலேயே ஹிஸ்புல்லாஹ் ஒரு நேர்மையை இதில் கையாண்டு இருக்கிறார் அதாவது முஸ்லிம் கொங்க்ரசை முன்னிறுத்தி அதில் எல்லோரும் ஒன்றிணைந்து மக்களின் உரிமையை ஜனநாயக ரீதியில் கேட்டு பெற்றுக்கொள்வோம் என்பது வாரவேட்கத்தக்கது
ReplyDeleteHisbullah doing everything by mahinda rajapakse background.all political dirtys
Deleteமுஸ்லீம் கூட்டமைப்பா அல்லது முஸ்லீம் காங்கிரஸ் கூட்டமைப்பா ?
ReplyDeleteஏனென்றால் இவனுவ எல்லேரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானே. இவனுவட்டப்போய் இக்லாஸைப்பத்தி நீங்க வேற கதைக்கிறீங்களேன்.
என்னத்தச் செஞ்சாலும் இந்தக் கழுதைகள் - கழுதைகள்தான். அதோட கால் நேரா வரவே வராது.
மாஷா அல்லாஹ் நல்ல மசூரா அமைச்சர் ஹிஸ்புல்லாவின் . ஆனால் எங்கள் கௌரவ தலைவர்
ReplyDeleteஉங்களது சவாலை ஏட்பதன்றால் நீங்கள் அவருடன் ஒப்பந்தம் செய்யோனும். அதாவது முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவர் பதவி, செய்யலாளர் எங்கள் கட்சிக்கு, 3/4 தேசியப்பட்டியல் மற்றும் அரச உயர்பதவிகள் எங்கள் கட்சிக்கு. இதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?
சும்மா போங்க சேர். எங்கட தலைவர் அதல்லாம் பார்க்க டைம் இல்ல. டீலிருந்தால் மட்டும் பேசுங்க . இல்லாட்டி போங்க சேர். சமூகமாவது கத்தரிக்காவாது. எங்கட கிழக்குமானம் எங்கட கைல இருக்கும்வரைக்கும் இங்க நாங்கதான் ராஜா. நாங்கதான் ஆட்சி அதிகாரம். சமுகம் யாருக்கு தேவ. வடக்கு/கிழக்குமாகாணம் மக்கள் என்றைக்கு சமூகம்பற்றி உணர்கிறார்களோ அன்றைக்குத்தான் இலங்கை முஸ்லிம் மக்களுக்கு நல்லகாலம்.
ஆகவே அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களே! உங்கட நல்ல முயட்சி. SLMC காரர்களை விட்டுட்டு அங்க இங்க இருக்கும் மற்றைய சகாக்களை கூட்டிக்கொண்டு அல்லாஹுக்காக களத்தில் இறங்குங்கள்.
ALL ARE SAME BOARD.ASHRAFF SIR THUUKI VEESIYA MUDHAL AALTHAN HISBULLAH.NEENGA MARANDACCHAA???
Deleteஇதற்கு நமது பெருந்தலைவர் ஒத்துக்கொள்வாரா? அவரும் அவருடைய அடிவருடிகளுக்கும் எங்கள் சமுகத்தின் நிலைமை விளங்குதியா. ஏன் இவர்கள் சுயநலவாதிகளாக இருக்கிறார்கள். SLMC என்றால் அது சுயநலவாதிகளா என்று மக்கள் கேட்கத்தொடங்கி விட்டார்கள். இவர்கள் இப்படியே வாய்பொத்திருந்தால் இன்ஷா அல்லாஹ் அவர்கள் SLMCன் சரிவை சந்திக்க மிகத்தூரமில்ல.
ReplyDeleteஇதில் ஹிஸ்புல்லா நல்லதை செய்ய விரும்புகின்றார் என்று பின்னூட்டம் எழுதிய சகோதர்கள் இரவில் விரகுதேடுபவர்களாகிவிட்டார்கள் விரகு எது பாம்பு எது என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியாது.
ReplyDeleteஹிஸ்புல்லா அவர்களே அமைச்சர் அஸ்ரபின் காலத்திலே நீங்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வாறு தீங்கு விலைவித்தீர் என்பது அறியப்பட்ட விடயம்
ReplyDeleteஅரசியல்வாதிகளுக்கு மக்களை நினைவு வர தேர்தலில் தோற்க வேண்டும். இல்லாவிட்டால் பதவி பறி போக வேண்டும். ஹிஸ்புல்லாஹ் கடந்த தேர்தலில் தோற்றததால் முஸ்லிம் கட்சிகளை ஒற்றுமை படுத்த (நடக்காது என்று தெரிந்து கொண்டு) பார்கிரார். பசிர் சேகுதாவூத். ஹசன் அலி அவர்களும் அவ்வாறே
ReplyDelete