அரசை விட்டு, ரிசாத் வெளியேறுவாரா..? பகிரங்க சவால்
வடபுல முஸ்லிம்கள் காலாகாலமாக பல இன்னல்களை சந்தித்து வரும் சமூகமாக காணப்படுகிரார்கள் விடுதலை புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட இனச்சுத்திகரிப்பின் மூலம் சொத்துக்களை இழந்தார்கள்,
சுகத்தை இழந்தார்கள், இப்படி அனைத்தையும் இழந்தவர்களுக்கு இருந்த ஒரே ஒரு நம்பிக்கை தாங்கள் உரிய இடங்களுக்கு என்றாவது ஒரு நாள் மீழ்குடியேற்றப்படுவோம் என்ற நம்பிக்கை மாத்திரமே.
இருதியான நம்பிக்கையும் தற்போது கனவாக கலைந்துள்ளது மறிச்சுக்கட்டி,மாவில்லு,வெப்பல்,
விளாத்திக்குளம்,கரடிக்குளி,பெரிய முறிப்பு போன்ற பகுதிகள் பாதுகாப்பு வனமாக ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாப்பு வனமாக பிரகனப்படுத்தப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் அன்று இனச்சுத்திகரிப்பின் மூலம் அங்குள்ள முஸ்லிம்களை வெளியேற்றினார் இன்று ஜனாதிபதி இடச்சுத்திகரிப்பு மூலம் அங்குள்ள முஸ்லிம்களை வெளியேற்றியுள்ளார்.
வில்பத்து வில்பத்து என்று பல ஊடகவியளாலர்கள் சந்திப்புக்கள் பல தொலைக்காட்சி நிகழ்வுகள் மூலம் வில்பத்து முஸ்லிம்களின் பூர்வீக இடம்கள்யென அமைச்சர் ரிசாத் பதூர்தீன் அவர்களால் பல தடவைகள் நிரூபிக்கப்பட்டது மூஸ்லிம்களின் பூர்வீக காணிகள் என்பதற்கு பல வரலாற்று சான்றுதல்களையும் நிரூபித்தும் உள்ளார் ஆனால் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஜனாதிபதி இனவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப கவனமாக அவர்களின் இலக்கை அடைய வழி அமைத்துகொடுத்துள்ளதுடன் ஜனாதிபதியும் தனது உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
வில்பத்து விடயம் தற்போது இருதிக் கட்டத்தை அடைந்து விட்டது…
இந்த விடயத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது மெளன விரதத்தை ஆரம்பித்துள்ளார்கள். இது அமைச்சர் ரிசாட்தின் பிரச்சினையென ரிசாட்டின் தலையில் போட்டு விட்டு தன்னை பாதுகாத்து கொள்ள முஸ்லிம் கட்சிகள் எத்தனிக்கிரதே தவிர வில்பத்து காணி விடயத்தில் இதுவரைக்கும் காத்திரயான நடவடிக்கையை எடுத்தாக தெரியவில்லை.
அமைச்சர் ரிசாத் பதூர்தீன் அவர்களே…!
எதிர்வரும் நாட்களில் வர்த்த நூகர்வோர் அமைச்சின் கீழ் நாடுபூராகவும் 50 லங்காசதோச நிறுவனத்தை எதிர்வரும் தினங்களில் ஜனாதிபதியின் தலைமையில் திறந்து வைக்கப்பட உள்ளது தங்களது அமைச்சால் முன்னைடுக்கப்பட்ட லங்காசதோச நிறுவன திறப்பு விழா நிகழ்வில் அமைச்சர் ரிசாத் புரக்கனித்து ஜனாதிபதிக்கு உங்கள் முதல் அழுத்தத்தை அதிலிருந்து ஆரம்பியுங்கள் பின்னர் நாடளாவிய ரீதியில் முஸ்லிம் சிவில் அமைப்புக்களை ஒன்று சேர்த்து முஸ்லிம் உரிமை போராட்டத்தை ஆரம்பியுங்கள் இதங்கும் சரியான தீர்வு இல்லையென்றால் நீங்கள் அரசைவிட்டு வெளியேறுங்கள்.
முஸ்லிம் சிவில் அமைப்புக்களே…!
இந்த விடயத்தில் தயவு செய்து நடுநிலைக் கண்ணோட்டத்தைச் செலுத்துங்கள். குறித்த காணிகள் நம்மவர்களின் காணிகள் அதற்கான ஆதாரங்கள், ஆவணங்கள் நம்மவர்களிடம் இருக்கின்றன. அந்தக் காணிகளை கபளீகரம் செய்கின்ற ஜனாதிபதியின் உத்தரவை எந்தக் காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கெதிராக போராட வேண்டியது நம ஒவ்வொருவரின் கடமையாகும்.
வில்பத்து முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகள் என்கின்ற விடயம் உரிய ஆவணங்களுடன் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஏன் தெளிவுபடுத்தப் படவில்லையா? என்ற சந்தேகம் தற்போது எழுகிரது. வில்பத்துக்காக போராடுகிறோம், போராடுகிறோம், என்று ஊடகங்ரகளில் போராடியவர்கள் போராடி வேண்டிய இடத்தில் போராடாமல் விட்டார்களா?
அல்லது அனைத்து உண்மைகளும் தெரிந்தும் இனவாதிகளை திருப்தி படுத்துகிரார்களா? இவாதிகளை திருப்தி படுத்த எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக போராட வேண்டியது உங்கள் கடமையில்லையா?
இதற்கு மேலும் அரசையும் ஆட்சியாளர்காளையும் நம்பிப் பலனில்லை இனிமேல் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்க கோட்டு சூட்டுக்களையும் A/C வாழ்க்கையையும் களந்து பதவியைத் தூக்கி எரிந்துதான் உரிமையை பாதுக்காக வேண்டுமாக இருந்தால் தூக்கி பதவி பட்டங்களை தூக்க எரிந்து விட்டு வாருங்கள் தலையில் தூக்கி உங்களை , ஜெனீவா,ஜனாதிபதி அலுவலகம் முன் ஆழைத்து செல்கிறோம் உரிமையை வெல்ல செய்யலாம்.
தமிழ் சமூகம் தமது உரிமைக்காக அரசாங்கத்தில் இருந்து கொண்டு மக்கள் போராட்டங்கள் ஊடாக தமது இலக்குகளை எவ்வாறு அடைகிரது என்பது நமக்கு முன் உதாரணமாக உள்ளது அல்லவா?
பணம்,பதவிகளை பெற்று கொண்டு சுகபோக வாழ்க்கை வாழ்ந்தது போதும் இன்னும் இன்னும் இந்த சமூகத்தை ஏமாற்றி மக்களை அடிமைச்சாசனமாக்கி உங்கள் அரசியலை மேற்கொள்ள முயற்சித்தால் முஸ்லிம் அரசில்வாதிகளுக்கு எதிரான போராட்டத்தை முஸ்லிம் சிவில் தலைமைகள் ஆரம்பிக்க வேண்டிய ஒரு காலம் உறுவாக வேண்டும் என்பது என அவாவாகும்.
அப்துல் மஜீத் முஹம்மட் பர்சாத்
காத்தான்குடி. 03

சாடிக்கேற்ற மூடிபோல தலைப்புக்கேற்ற மாதிரிப்படம் ஒன்றைப் பிரசுரித்தமைக்கு jaffna முஸ்லிமுக்கு நன்றிகள் . இப்படத்தில் கொழும்பு பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் மைத்ரியைப் பார்த்து ஏதோ கூற அருகே இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் றிஷாதைப் பார்த்து புன்முறுவல் சிரிக்க மைத்திரி றிஷாதின் தோளில் தட்டி ஆறுதலாக "எதை இழந்தாலும் தோளமையை விட்டுக்கொடுக்காத தலைவன் என்று சொல்வது போல் தெரிகிறது. பாவம் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள்தான்.
ReplyDeleteஇரு தோணிகளில் கால் வைத்தால் போல பிறப்பிடம் மன்னாரையும் இழந்து இருப்பிடம் புத்தளத்தையும் தொலைத்து வீதிகளில் அங்கலாய்க்கப்படுகின்றனர். இவர்களின் கரை சேராத ஓடம் எப்பொழுது மூழ்கடிக்கப்படுமோ அப்பொழுதுதான் அரசியல் வாதிகளுக்கும் மக்களைக் காட்டி பிழைப்பு நடத்த முடியாமல் போகும். எல்லாமே அரசியலில் காய் நகர்த்தல்கள் தானே .
"RISHAD THANAZU MAATTUP PANNAIYAI NANRAAGAVEY
ReplyDeleteKAVANITHTHUKKOLGIRAAR" enru My3 thoalil thattik
koduppathai vida veru ennayya venum ?Rishadukku
oru aattup pal kooda kidayathu enbathai My3yum
kandu kondaar ! Innum ennayya venum ? Ellam
subamey.