இலங்கை - இஸ்ரேல் சங்கத்தில் முக்கிய பதவியிலுள்ள பிக்கு, முஸ்லிம் கிராமத்தில் சிலைவைக்க முயற்சி
(அபூ செய்னப்)
கடந்த சில நாட்களாக நாச்சியாதீவில் முஸ்லிம்கள் வாழுகின்ற பிரதேசத்தில் இடம்பெற்ற இனவாத செயற்பாட்டினைத் தொடர்ந்து புதன் கிழமை (29) அன்று பிரஸ்தாப பிரதேசத்தில் புத்தர் சிலை வைக்கப்போவதாக குறிப்பிட்ட பிக்கு பகிரங்க அறிவித்தல் விடுத்திருந்தார்.
முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்ற இந்தப்பிரதேசத்தில் நாச்சியாதீவை சூழவுள்ள பெரும்பான்மையினர் வசிக்கின்ற சிங்கள கிராமங்களில் உள்ள பெளத்த பிக்குகளோடும் சிங்கள மக்களோடும் மிகவும் புரிந்துணர்வோடும்,அன்னியோன்யமா கவும் வாழ்ந்து வருகின்றனர். இதனால் நாச்சியாதீவு முஸ்லிம் மக்களுடன் சூழவுள்ள சிங்களமக்கள் ஒற்றுமையாகவே கடந்த காலங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் பொதுபல சேனா வின் இனவாத போக்கின் போது கூட ஹிதோகம பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் அத்துருவெல்ல சத்தாதிஸ்ஸ ஹிமி ஆகியோரின் நேர்மையான நடவடிக்கைகளால் நாச்சியாதீவு முஸ்லிம் கிராமங்களுக்குள் பொதுபல சேனாவினால் ஊடுருவ முடியவில்லை.
இவ்வாறு ஒற்றுமையாக வாழ்ந்து வந்த இரண்டு சமூகத்திற்குள்ளும் மனக்கசப்பை உண்டு பண்ணும் நோக்கில் நாச்சியாதீவில் சிலைவைக்க முனைகின்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வடமத்திய,வடமேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு நிலவரத்தை விளக்கி நாச்சியாதீவில் நடைபெறவிருக்கும் இந்த அசம்பாவிதத்தை தடுத்து அங்கு வாழுகின்ற முஸ்லிம்களின் அச்சத்தை போக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதனடிப்படையில் இந்த இனவாத செயற்பாட்டை கட்டுப்படுத்த SSP ரவி பீரிஸ் தலைமையில் விசேட குழு அமைக்கப்பட்டதோடு இதுதொடர்பில் உடனடியாக செயலாற்றுமாறும் அவருக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரினால் கட்டளை இடப்பட்டது. SSP ரவி பீரிஸ் அவர்களின் தொடர்பு இலக்கமும் நாச்சியாதீவு முஸ்லிம் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையை சேர்ந்த உபதலைவர்களான ஏ.ஆர்.எம்.பர்வீன், ஏ.ஏ.எம்.ரஸ்கான் சிரேஷ்ட ஊடகவியலாளர் ரிஸ்வி மஹ்ரூப், நாச்சியாதீவு கிராமத்தின் இந்த விடயத்தில் முன்னின்று செயற்படுகின்ற பலரில் ஏ.சி .வாஹித், எம் .பி.எம்.நஸ்வர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இந்த விடயத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாச்சியாதீவு மக்களை நிம்மதியடையச்செய்கின்ற விடயத்தில் பலர் களத்தில் இறங்கி செயற்படுகின்றார்கள்.அனைவரினது ம் நோக்கம் நாச்சியாதீவில் நிலவிவருக்கின்ற பதற்ற நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதாகும்.
அந்தவகையில் அமைச்சர்களான ஹெரிசன், துமிந்த திஸாநாயக்க மற்றும் மிகிந்தலை தொகுதி ஐ.தே .கட்சி அமைப்பாளர் கருணாரத்ன ஹேரத்,அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோருடன் அவர்கள் சார்பானவர்கள் கதைத்துள்ளனர். பிரஸ்தாப அமைச்சர்களும் குறித்த இனவாத செயற்பாட்டினை தடுக்கக்கோரி பிரதி பொலிஸ் மாஅதிபருடன் பேசியதாகவும் தகவல் கிடைத்துள்ளன.
எப்படியோ தனியான முஸ்லிம் கிராமமான நாச்சியாதீவை இனவாதிகளின் பிடியிலிருந்து காப்பாற்றுவது தொடர்பில் அனைத்து அரசியல் சக்திகளும் இணைந்து செயற்படுவது வரவேற்கத் தக்கது. இந்த ஒற்றுமைதான் முஸ்லிம் சமூகத்தின் பலமாகும்.
புதன்கிழமை (29) காலை 7.00 AM மணிக்கு குறிப்பிட்ட இனவாத பிக்கு வாழும் தோட்டம் பகுதிக்கு சிலை வைக்க வருவதாக அறிவித்ததை அடுத்து அப்பகுதிக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் சொன்னது போல குறித்த பிக்குகள் அங்கு வரவில்லை. இருந்தும் ஹிதோகம பொலிஸாரினால் அந்த பிக்குகள் நாச்சியாதீவுக்குள் நுழைவதற்கான நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும், அதனை மீறி அவர்கள் ஊருக்குள் பிரவேசித்தால் விசேட அதிரடிப்படையைக் கொண்டு அவர்களை தடுப்பதாகவும் SSP ரவி பீரிஸ் உறுதியளித்துள்ளார்.
இந்த இனவாத செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்ற பிக்கு இலங்கை -இஸ்ரேல் சங்கத்தின் முக்கிய பதவியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் முஸ்லிம்களை பழிவாங்குகின்ற கயமை எண்ணம் கொண்ட இஸ்ரேலின் பணத்திற்காக இந்த பிக்கு செயற்படுகின்றாரோ என்கின்ற ஐயம் பிரதேசத்தில் நிலவுகிறது அத்தோடு இந்த பிரச்சினையை தூண்டிவிட்ட அல்லது இதற்க்கு அடித்தளமிட்ட நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் லசிந்து தொடர்பிலும் நாச்சியாதீவு மக்கள் தமது சந்தேகத்தை தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் வெள்ளிக்கிழமை (17) அன்று அமைச்சர் ஹக்கீம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நீர்ப்பாசன திணைக்களத்தின் உயர் அதிகாரிகளின் குழுவொன்று வெள்ள அனர்த்த காலத்தில் மேலதிக நீர் வழிந்தோடுமுகமாக நாச்சியாதீவுக் குள்ளால் வெட்டப்பட்ட கால்வாய் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள அனுப்பப்பட்டது. இதன்போது குறிப்பிட்ட வாழும் தோட்ட தக்கியா பிரதேசமும் அதிகாரிகளுக்கு காட்டப்பட்டது. இதன் போது சம்பந்தமே இல்லாமல் இந்தப்பிரதேசம் நீர்ப்பாசனத்துறையின் பிரதேச பொறியியலாளர் லசிந்து என்பவரால் நிறுத்தி வைக்கப்பட்டது.தொடர்பிலும் அதிகாரிகளுக்கு மக்களால் முன்வைக்கப்பட்டது. மக்களின் கோரிக்கைகளை கேட்ட அதிகாரிகள் வாழுந்தோட்ட தக்கியா பிரதேசத்தினை விடுவித்து கொடுக்குமாறு அனுராதபுர மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் பிரசன்னவுக்கு உத்தரவிட்டார்கள்.
இதன்பின்னரே குறித்த வாழும் தோட்ட தக்கியா பகுதிக்கு ராஜாங்கனைய சித்தார்த்த தேரோ என்பவர் வந்து பிரச்சினை ஏற்படுத்தினார். இதன்போது குறித்த தேரர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு கடுமையாக ஏசியதோடு, அதிகாரிகளை மாற்ற நாச்சியாதீவு மக்கள் முனைவதாகவும் அதற்க்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும், கடுமையான இனவாத தொனியில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அன்வர் சதாத் குழுவினருடன் வாக்குவாதப்பட்டார். இதன் பின்னர் ஹிதோகம போலீசார் இந்த விடயத்தில் தலையிட்டு சமரசத்திற்கு விடயத்தை கொண்டுவந்தனர். எனவே அமைச்சர் ஹக்கீமின் தலையீடு இந்த விடயத்தில் இருப்பது, நீர்ப்பாசன பொறியியலாளருக்கு மட்டுமே தெரிந்த விடயம் அந்த பிக்குவுக்கு தெரியப்படுத்தியது யார்? குறித்த பொறியியலாளர் பொதுபல சேனாவின் அங்கத்தவரா? என்கின்ற நியாயமான சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதற்கிடையில் புதன்கிழமை (29) மாலை புத்தர் சிலை வைக்கின்ற நிகழ்வினை மேற்கொள்ளவிருப்பதாக குறித்த பிக்குவினால் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் நாச்சியாதீவினை சுற்றியுள்ள ஏனைய விகாரைகளின் பிரதான பிக்குகளுக்கு இதில் உடன்பாடுயில்லை எனவும் அவர்கள் இந்த சிலை வைப்பு விவகாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்க மாட்டார்கள் என்றும் SSP ரவி பீரிஸ் உறுதியாக கூறுகின்றார்.
சிலைவைப்பு விடயத்தில் குறித்த நேரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த அமைச்சர் ஹக்கீம் உற்பட ஏனைய அமைச்சர்களுக்கும்,சிரேஷ்ட ஊடகவியலாளர் ரிஸ்வி மஹ்ரூப் மற்றும் கூடிய கவனம் எடுத்து இதனை அவதானிக்கின்ற SSP ரவி பீரிஸ், ஹிதோகம பொலிஸார், ஏனைய விகாரைகளின் விகாராதிபதிகள் ஆகியோருக்கு ஊர் மக்கள் தமது நன்றியை தெரிவித்தனர்.
இருந்தும் பதட்ட நிலை மாறாமல் சோபையிழந்து காணப்படுகிறது நாச்சியாதீவு. விரைவில் இயல்பு நிலைக்குள் நாச்சியாதீவு திரும்ப இறைவன் துணைபுரிவானாக.

Aameen
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteமுஸ்லிம்களுக்கு எதிராக யஹூதிகள் இப்படியான தீங்குகளை உலகம் பூரா மறைமுகமாக செய்து கொண்டு இருக்கிறார்கள் இந்த முயற்சியை வெளிப்படையாக காட்டி வேறு பல தீங்குகள் மறைமுகமாக நடந்து கொண்டிருக்கும் நாம் எம்மை பற்றி சிந்திக்காது விட்டு விட்டால் அல்லாஹ்வும் எங்களை விட்டு விடுவான் வெறும் கையேந்துவதை அல்லாஹ் விரும்புவதில்லை அதேநேரம் எங்களின் கைகளை நம்பி மாத்திரம் செயற்படுவதையும் அல்லாஹ் விரும்புவதில்லை,எமது செயல்களுக்கு அல்லாஹ்விடம் கையேந்துவதும் நாமும் எமது பங்குக்கு சிந்தித்து செயல் படுவது மிக முக்கியம் அல்லாஹ் எங்களை கைவிடாது இருக்க அல்லாஹ் எங்களுக்கு காட்டிய வழிகளில் எங்களது வாழ்க்கையை அமைத்துக்கொள்வது மிக முக்கியமானது உதாரணமாக:- அல்லாஹ்வுக்கு மிக வெறுப்பான வட்டியில் இருந்து எந்த அளவுக்கு நாம் விலகி இருக்கிறோம்,சிந்திப்பவர்களுக்கு பல உண்மைகள் தெரிய வரும் (ஒருவன் வட்டியுடன் சம்பந்தப்பட்டவனாக மௌத்தனால் அவன் நிரந்தர நரகவாதி)
இன்று இருக்கும் லீசிங்:-
சில உலமாக்கள் (பரவலாக மக்களும் இவர்களின் பfதுவாக்களை நம்பி) இஸ்லாமிய லீசிங் முறை என்று ஒன்றை கூறிக்கொண்டு வாகனங்கள் எடுத்துள்ளார்கள் நான் அறிந்த வரையில் இஸ்லாம் அனுமதித்த அழகிய கடன் என்று கேள்விப்பட்டுள்ளேன், சிலர் லீசிங் உண்டு என்று வாதிடலாம்.,அப்படி சொல்பவர்களிடம் ஒரு கேள்வி இன்று இலங்கையில் இருக்கும் எந்த லீசிங்கும் அல்லாஹ்வும்,அல்லாஹ்வின் ரசூலும் அனுமதித்ததாக இருக்கிறதா? ! வட்டி பற்றி கடுமையான எச்சரிக்கையை அல்லாஹ்வும்,அல்லாஹ்வின் ரசூலும் கூறி உள்ளார்கள் ஒருவன் வட்டியுடன் தொடர்பு பட்ட(எடுப்பது,கொடுப்பது,வழிகாட்டுவது,சாட்சியாக இருப்பது,எழுதுவது ............) நிலையில் மரணித்தால் நிரந்தர நரகம் இதை அல்லாஹ்வும்,அல்லாஹ்வின் ரசூலும் வலியுறுத்தி எச்சரிக்கை செய்துள்ளார்கள்
abu zalha is perfectly correct
ReplyDelete