Header Ads



இலங்கை முஸ்லிம்கள் புறக்கணிப்பு, ஜெனீவாவில் ஒலித்த குரல்

இலங்கையின் நீதி மற்றும் அரசியல் தீர்வு செயற்பாடுகளில் சர்வதேசம் ஈடுபடும்போது முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்பட்ட வர்களாகவே காணப்படுகின்றனர் என்று  சட்டத்தரணியும் சிவில் அரசியல் உரிமை தொடர்பான செயற்பாட்டாளருமான பாயிஸ் அமீர் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வளாகத்தில் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்த இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பான உப குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்;

இலங்கையின் நீதி மற்றும் அரசியல் தீர்வு செயற்பாடுகளில் சர்வதேசம் ஈடுபடும்போது முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்பட்ட வர்களாகவே காணப்படுகின்றனர்.

இந்த நிலைமை மாற வேண்டும். குறிப்பாக இந்த விடயங்களில் முஸ்லிம்களை உள்ளீர்த்துக் கொள்ள வேண்டும். ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகர் ஆலயமும் இடம்பெயர்ந்தோர் விடயத்தில் முஸ்லிம் மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே பார்க்கின்றது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திலும் முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்படுவதையே அவதானிக்கின்றோம். இந் நிலைமையை மாற்ற வேண்டும். இந்த விடயங்களில் முஸ்லிம்கள் உரிய முறையில் உள்வாங்கப்பட வேண்டும். மேலும் இலங்கையில் சிறுபான்மை மத ரீதியான வன்முறைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார். 

No comments

Powered by Blogger.