Header Ads



சிறைச்சாலையில் விமலின், உண்ணாவிரதம் ஆரம்பம்

கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தனது சிறை அறையில் உண்ணாவிரத போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.

குறித்த விடயத்தினை தேசிய சுதந்திர முன்னணியின் கட்சி தகவல்கள் தெரிவித்துள்ளன.

விமல் வீரவன்ச வெலிக்கடை சிறைச்சாலையில் இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமல் வீரவன்சவுக்கு 73 நாட்களுக்கு மேலாக பிணை வழங்கப்படாத காரணத்தினாலேயே குறித்த உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆட்சி காலத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில், இவர் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.