அல் அகீல் முஸ்லிம் வித்தியாலய மாணவன் 9 A சித்திகளைப் பெற்று சாதனை
சப்ரகமுவா மாகானம் கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்டை கல்வி வலைத்திட்குற்பட்ட அல் அகீல் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் எம்.ஐ.மொஹமட் இபாம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ சித்திகளைப் பெற்று பாடசாலையின் இவ்வருட சாதனையாளராக விளங்குகின்றார்.
மத்தமகொடை கொட்டியாக்கும்புரையைச் சேர்ந்த மொஹமட் இல்ஹாம் மற்றும் பாதிமா ரியாசா தம்பதியரின் புதல்வனான இவர் ஐந்தாம் ஆண்டு பலமைப் பரிசில் பரீட்சையிலும் சித்தியடைந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது


Post a Comment