Header Ads



முசலி முஸ்லிம்களின் உரிமைப் போராட்டம் தொடர்­கி­றது, மைதா­னத்தில் ஜும்ஆ தொழு­கைக்கும் ஏற்­பாடு

-SNM.Suhail - விடிவெள்ளி)

தமது பூர்­வீக இடங்­களை பாது­காக்­கப்­பட்ட வனப்­பி­ர­தே­ச­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தி­ய­மைக்கு கடு­ம் எதிர்ப்பை தெரி­வித்து முசலி மக்­கள் ஆரம்பித்துள்ள சத்­தி­யாக்­கி­ர­கப்­போ­ராட்டம் நேற்று இரண்டாம் நாளா­கவும் தொடர்ந்­தது. 

இன்றும் மூன்றாம் நாளாக அப்­போ­ராட்­டத்தை நடத்த விருக்கும் முசலி மக்கள், நாளை வெள்ளிக்­கி­ழமை பாரி­ய­தொரு மக்கள் போராட்­டத்தை முன்­னெ­டுக்க திட்­ட­மிட்­டுள்­ளனர். இதன் பொருட்டு நாளை ஜும்ஆ தொழு­கையை மைதா­னத்தில் நடத்­து­வ­தற்கும் ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டுள்­ளனர். 

இந்த மக்கள் போராட்­டத்­திற்கு பிர­தே­சத்தில் உள்ள விஷ்ணு எனும் தமிழ் அமைப்பு நேற்றைய தினம் ஆத­ரவு வழங்கி அதில் கலந்துகொண்­டதுடன் அப்­ப­கு­தி­யி­லுள்ள கிறிஸ்தவ பாரி­மார்­களும் கலந்­து­கொண்டு தமது ஆத­ரவை வழங்­கினர்.  

நேற்­று­முன்­தினம் செவ்­வாய்­கி­ழமை  மன்னார் முசலி பிர­தே­சத்திலுள்ள அதி­க­மான பூர்­வீக இடங்­களை வில்­பத்து வன பகு­திக்­கான எல்­லை­யாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன புதிய வர்த்­த­மா­னியில் கையொப்பம் இட்­டதை தொடர்ந்து வர்த்­த­மானி அறி­வித்­தலை உட­ன­டி­யாக ஜனா­தி­பதி ரத்துச் செய்ய வேண்டும் என்ற கோரிக்­கை­யுடன் மறிச்­சி­கட்டி, பாலைக்­குழி மற்றும் கர­டிக்­குழி ஆகிய பகு­தி­களைச் சேர்ந்த நூற்­றுக்­க­ணக்­கானோர் இந்தப் போராட்­டத்தை ஆரம்­பித்­துள்­ளனர். இதில் பிர­தே­சத்­தி­லுள்ள கிரா­மிய அபி­வி­ருத்தி சங்­கங்கள், மீனவர் சங்­கங்­களும் கலந்­து­கொண்­டன. 

இந்­நி­லையில் நேற்­றைய தினம் மேற்­கு­றிப்­பிட்ட மூன்று கிராம மக்­க­ளுடன் ஹுனைஸ் நகர், கொண்­டச்சி, அகத்­தி­மு­றிப்பு, பொற்­கேணி, வேப்­பங்­குளம் ஆகிய கிராம மக்­களும் இணைந்­து­கொண்­டனர்.

அத்­துடன் முசலி பிர­தேச அனைத்து பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னமும் மக்­களின் உரிமைப் போராட்­டத்­திற்கு பூரண ஆத­ரவு வழங்­கு­வ­தாக குறிப்­பிட்­டுள்­ளது. உள்ளூர் அர­சி­யல்­வா­தி­களும் நேற்­றைய இரண்டாம் நாள் சத்­தி­யாக்­கி­ரகப் போராட்­டத்தில் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். 

போராட்­டத்தில் கலந்­து­கொண்டோர் தெரி­விக்­கையில்,
பல வரு­ட­கா­ல­மாக நாங்கள் வாழ்ந்த காணி­களை வில்­பத்து பிர­தே­ச­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யதை நாங்கள் வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றோம். ஓரு போதும் எங்கள் தாய் மண்ணை விட்டு வெளி­யேற மாட்டோம் என்றும் நேற்­றுக்­கூட ஜனா­தி­ப­திக்கு எங்கள் கோரிக்­கை­யினை முசலி பிர­தே­சத்தில் உள்ள அனைத்து சமூக மட்ட அமைப்­புக்கள் ஊடாக அனுப்பி இருக்­கின்றோம்.

கடந்த ஆட்சி காலத்தில் எங்­க­ளுக்கு அநி­யாயம் இடம்­பெற்­ற­தாகத் தெரி­வித்து தான் இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கினோம். ஆனால் இந்த அர­சாங்கம் எங்­க­ளுக்கு நல்­லதை செய்­யாமல் எங்கள் உற­வுகள் பரம்­ப­ரை­யாக வாழ்ந்த காணி­யினை கொள்ளை அடிக்கும் சூழ்ச்சி வேலை­களை செய்­துள்­ளது.

எங்கள் போராட்­டத்­திற்கு கட்சி அர­சி­ய­லுக்கு அப்பால் அனைத்து அர­சி­யல்­வா­தி­களும் ஒன்­று­சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம் என்றனர். 

இதற்கு ஜனாதிபதி நீதியான தீர்வொன்றினை வழங்கும்வரை போராட்டம் தொடருமென சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

3 comments:

  1. அரசுதான் மாறினாலும் இனவாத பூதம் பாதிக்கப்பட்ட மன்னார் முஸ்லிம்களை துரத்திக்கொண்டே இருக்கிறது.
    இவர்களின் துயரத்தில் பங்கு கொள்ளும் முகமாக நாளை வெள்ளிக்கிழமை ஆகையால் ஜும்மா தொழுகையின் பின்னர் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தவர்களாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சில நிமிடம் செலவிடுங்கள். அல்லாஹ் உங்களின் துன்பங்களையும் போக்கப் போதுமானவன்.

    ReplyDelete
  2. Allah is enough to deprive the post of this callous government.

    ReplyDelete

Powered by Blogger.