Header Ads



புரியப்படாத அரசியல்மாற்றமும், கைவிடப்பட்ட முஸ்லீம்களும்..!!

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் பல்லாயிரம் உயிர்களை காவு கொண்டு   ஜனாதிபதிமகிந்த ராஜபக்க்ஷவின் ஆட்சிக் காலத்தில் இலங்கை இராணுவத்தினால் முடிவுக்கு  கொண்டுவரப்பட்டது . இதனை தனது அரசியல் இருப்புக்குச்சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மகிந்த  அரச இயந்திரம் பெரும் வெற்றி விழாக்களை   கொண்டாடி  தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின்  வடுக்களை  விழுப்புண்ணாகமாற்றியது .

போர்க்கால   வெற்றியை  பயன் படுத்தி  அரசு  தனிச் சிங்கள மக்களின் ஆதரவைப் பெரும் நோக்கில் பல்வேறு பிரச்சாரங்களை நாட்டில் முடுக்கி விட்டது நாட்டை மீட்டெடுத்த இராணுவத்தையும்  அதற்கு பக்கபலமாக இருந்த  அரச இயந்திரமான ராஜ பக்ஷகளையும்  மின்சாரக் கதிரையில் உக்கார வைக்கும்  நடவடிக்கைகளை மேற்கத்தேய நாடுகள் எடுத்து வருவதாக  தீவிர பிரச்சாரம் மேற்கொண்டது . சிங்கள மக்களின் மனோ நிலையை புரிந்து  கொள்ளாத    இலங்கை புலனாய்வுத்துறையினரும்  மகிந்த ராஜ பக்ஸ அரசுக்கு சிங்களமக்களின் தொண்ணூறு விகித ஆதரவு இருப்பதாக அறிக்கைகளை சமர்பித்துக் கொண்டிருந்தது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த அரசு சிறுபான்மை மக்களை ஒடுக்கி சர்வதிகார ஆட்சி ஒன்றுக்குள் முகத்தை திருப்பியது சிங்கள மக்களை திருப்தி படுத்துவதாக நினைத்துக் கொண்டு சிறுபான்மை மக்களுக்கு எதிரான பேச்சுக்களை  சிங்கள மக்கள் மத்தியில்  பேசத்தொடங்கினார்  மகிந்த இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பேரினவாதிகள் அரசின் ஆதரவுடன் சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான நடவடிக்களில் களம் இறங்கினர் கிராமங்கள் நகரங்கள் தோறும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதப் பிரச்சாரங்களை மேற்கொண்டனர் .

இங்கிருந்துதான் மேற்கேத்தேய நாடுகளின் செய் அல்லது கொள்வோம் முடியாவிட்டால் ஆட்சி கவிழ்ப்போம் என்ற  கொள்கைகேற்ப நடவடிக்கைகள் ஆரம்பமானது . இதற்காக முதலாளித்துவ கொள்கையை  அரசியல் கொள்கையாகக் கொண்ட  கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமா சிங்க  தயார் செய்யப்பட்டார் .

அமெரிக்காவில் வாழும் சிங்கள பணக்காரரும்  தயாரானார் இனவாத அமைப்பொன்றை நேரடியாக அழைத்து பேச்சுக்கள் இடம் பெற்றது  நிதிக் கைமாரல்களும் இடம் பெற்றன தமக்கு மேற்கத்தேய நாடுகளின்  ஆதரவும் இருப்பதாக  நம்பிக் கொண்ட  இனவாதிகள்  படு சுறு சுறுப்பாக கலமிரகப்படனர் சிறுபான்மை மக்களை    குறிப்பாக முஸ்லிம்களின் வணக்கஸ்தலம்  வாழ்விடம் என்பன குறிவைக்கப்பட்டு  நடவடிக்கைகள் நகர்ந்து கொண்டு சென்றது  இதனை கலவரமாக மாற்றி சர்வதேசம் வரை இழுத்துச் சென்றது .மேற்கத்தேய நரிகள் .

இதனை சாதகமாக பயன்படுத்த முனைந்த ராஜபக்ஸ அரசாங்கம் மௌனம் காத்தது இச்சம்பவங்கள் மேலும் சிறுபான்மை மக்களை அச்சமூட்டச் செய்தன அரசுக்குஎதிராக மக்கள் மாற்றுத் தீர் வொன்றை வேண்டிநின்றனர் 
முதலாளித்துவ மேற்கத்தேய அரசுகளின் நண்பனான ரணிலை பயன்படுத்தி தமக்கு சாதகமான அரசையும் ஜனாதிபதியும் மேற்கத்தேயம்  வெற்றிகரமாக கொண்டுவர முடிந்தது.

நல்லாட்சி என்ற படுகுழியில் திட்டமிடப்பட்டவாறு  முஸ்லிம்களும் தமிழர்களும் மீள் எழ முடியாதவாறு தள்ளிவிடப்பட்டுள்ளனர் அரசியல் தீர்வு கிடப்பில் போடப்பட்டுவருகிறது. எல்லாம் முடிந்த பின்னர்தான் மகிந்த விழித்துக் கொண்டார் .தான்  முன்னெடுத்து வந்த சர்வாதிகாரபோகினால் ஆட்சியை பறி கொடுத்த ராஜபஷைகளின்    கும்பல்  நல்லாட்சி என்ற கூடாரத்துக்குள் உயிர் வாழ்ந்து கொண்டிருகிறது .

இந்த எச்சங்களே  சிறுபான்மை மக்களை பழிவாங்கக் காத்துக் கிடக்கிறது இதற்காக இதுவரை மகாத்மா வேடம் போட்டுவந்த மைத்திரியின் வேடம் கலைந்தது சிறுபான்மை மக்களை அமைதியாக மேற்கத்தேய  பாணியில் காய்கள்  நகர்த்தப்படுகிறது.

ஜனாதிபதியின் கட்சியில்  பங்களார்களாக உள்ள முஸ்லிம் எம் பீக்கள் சிலகாலங்களாக முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பில்  பாராளுமன்றத்தில் பெரும் போராளிகளாக  மாறிவரும்   நிலையில்  ஜனாதிபதியின் இனவாத நடவடிக்கைகள் மௌனமாக ஊரத் தொடங்கியுள்ளன . சிறுபான்மை  வாக்குகளை பெறுவது கடினமானது என்பதை தெரிந்து கொண்ட ஜனாதிபதி எஞ்சி இருக்கும்  சிங்கள மக்களின் வாக்குகளை தக்கவைத்துகொள்ளும்  நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார். மகிந்தவின் பாணியில் அரசியளில் புதிய களம் ஒன்றை  துவக்கி உள்ள மைத்திரி ரணிலால் தயாரிக்கப்பட்ட  ரோபோ என் பதை  மறந்துவிட முடியாது 

முஸ்லிம் அரசியல் தலைமைகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கையாலாகதவர்கள் என்பதை மக்கள் உணரத்தொடங்கி விட்டனர் போல  தோன்றுகிறது மக்கள் அரசியல் தொடர்பில் விவாதிக்க ஆரம்பித்து விட்டனர் 

Mohamed faiz uk

No comments

Powered by Blogger.